• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’!

by Tamil2daynews
July 24, 2020
in சினிமா செய்திகள்
0
விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும்.
இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ‘பிச்சைக்காரன்’ படத்துக்காக இயக்குநர் சசி அவர்களுக்குத்தான் நான் முதலில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். காரணம், என்றென்றும் மறக்க முடியாத வெற்றிப்படமாக எங்கள் நிறுவனத்துக்கு அமைந்த படம் ‘பிச்சைக்காரன்’. சசி அந்தப் படத்துக்காக மிகச் சிறப்பாகப் பணியாற்றி மகத்தான வெற்றியை ஈட்டித் தந்ததுதான், இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இரண்டாம் பாகத்தைத் தொடர காரணமாக அமைந்திருக்கிறது.
விமர்சன ரீதியில் பெரும் பாராட்டைப் பெற்றதுடன் தேசிய விருதையும் வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி, பிச்சைக்காரன் 2 படத்தில் இணைந்திருப்பது எங்கள் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. மகத்தான படைப்பாக அமைந்த பாரம் மட்டுமின்றி, அவர் உருவாக்கிய ‘கங்கூபாய்’ மற்றும் ‘பெர்ஸி’ ஆகிய படங்களும் வித்தியாசமான  உருவாக்கத்திற்காக வெகுவாக பாரட்டப்பட்ட படங்களாகும். விஜய் ஆன்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக பொருட் செலவில் தயாராகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கதைக் களம் இதுபோன்ற பொருட் செலவு மூலம், படத்தின் மதிப்பைக் கூட்டுவதாக அமைந்திருக்கிறது” என்று கூறினார் பாத்திமா விஜய் ஆன்டனி.
விஜய் ஆன்டனியைப் பொறுத்தவரையில் இந்தப் படத்துக்காக இப்போதே தயாராகத் தொடங்கி விட்டார். முதற்கட்டமாக பத்து முதல் பதினைந்து கிலோவரை உடல் எடையைக் குறைக்கும் முனைப்புடன் கடும் உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கதாநாயகி வேடத்தில் நடிக்க முன்னணி நாயகிகள் சிலருடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வரும், கலை இயக்குநராக ஆறுமுக ஸ்வாமியும், சண்டைப் பயிற்சியாளராக மகேஷ் மாத்யூவும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகியிருக்கின்றனர்.
Previous Post

புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்*

Next Post

கலாம்  சலாம் – மெய்நிகர் அஞ்சலி

Next Post
கலாம்  சலாம் – மெய்நிகர் அஞ்சலி

கலாம்  சலாம் - மெய்நிகர் அஞ்சலி

Popular News

  • *ரிஸ்க்கான விஷயங்களை முயற்சி செய்ய ஊரடங்கை பயன்படுத்திக்கொண்ட ஷீலா ராஜ்குமார்*.

    தமிழக பெண் உருவாக்கிய அசத்தலான ஆஃப் Reto – நடிகை இந்துஜா வெளியிட்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்.26ல் கோவாவில் நடுக்கடலில் மெஜஸ்டிக் பிரைட் குரூஸில் நடைபெறும் Mr. Miss & Mrs. Fashion World 2021

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் பிரபுதேவா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் – மிகவும் எதிர்பார்க்கப்படும் #ARRPD6 படப்பிடிப்பு இன்று துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • கொரோனாவை வீழ்த்தும் ‘லோக்கல் சரக்கு’! – விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், Srinivasaa  Silver Screen வழங்கும்,  RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

January 27, 2026

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !! மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” ) திரைப்படம்

January 27, 2026

“ROOT – Running Out of Time” திரைப்படத்தில் அபர்ஷக்தி குரானாவின் அட்டகாசமான லுக்கை இயக்குநர் A.R. முருகதாஸ் வெளியிட்டார்

January 27, 2026

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!

January 27, 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

January 27, 2026

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!

January 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.