• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

என் கதையில நான் ஹீரோ டா – விஸ்வாசம் பற்றி வில்லன் ஜெகபதி பாபு!

by admin
January 8, 2019
in சினிமா செய்திகள்
0
என் கதையில நான் ஹீரோ டா – விஸ்வாசம் பற்றி வில்லன் ஜெகபதி பாபு!
0
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மிகவும் ஸ்டைலான மற்றும் மக்களை கவரும் தோற்றத்துடன் கூடிய ஒரு சிறந்த நடிகரை கண்டுபிடிப்பது மிகவும் அபூர்வமானது. ஜெகபதி பாபு இந்த குணங்களை கணிசமாக வைத்திருப்பதால் தான், மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு நடிகராக இருக்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சென்னையுடன் ஒரு பிரிக்க முடியாத பந்தத்தை கொண்டிருக்கும் அவர் “விஸ்வாசம்” படம் அவரை தமிழ்நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்கும் என நம்புகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “வெளிப்படையாக சொல்வதென்றால் குழந்தை பருவத்தில் இருந்தே இந்த மண்ணில் ஒரு ஹிட் திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன். நிச்சயமாக, இந்த படம் என் நீண்ட கால கனவை நிறைவேறற போகிறது” என்றார்.

“விஸ்வாசம்” குழுவில் பணிபுரிந்த அவரது அழகான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது, “அஜித் சார் போன்ற ஒரு நபர் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர். மக்களுக்கு பல நல்ல விஷயங்களை நிறைய செய்திருக்கிறார். மற்ற நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் அஜித் சார் போன்ற ஒரு நடிகர், அவர் ரசிகர்களிடம் இருந்து பெறும் மரியாதை மற்றும் ஆராதனைக்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “விஸ்வாஸம்” படத்தில் ஹீரோ, வில்லன் என இருவருமே “சால்ட் ‘என்’ பெப்பர்” தோற்றத்தில் தோன்றுவதால், ஆரம்பத்தில் இருந்து நேர்மறையாக அதை உணர்ந்தேன். அஜித்தை ரசிகர்கள் அத்தகைய நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் மாஸ் மற்றும் கிளாஸ் என ஒரு கலவையை கொண்டிருக்கும். குறிப்பாக மாஸ் காட்சிகளை, அவரது அலப்பறையை, அப்பாவிதனத்தை அவருடைய ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் நன்றாக அனுபவிப்பார்கள். உண்மையில், என்னுடைய சிந்தனையுடன் அந்த கதாப்பாத்திரம் ஒத்துப் போனதால், அவரது கதாபாத்திரத்தை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினேன்.

குறிப்பாக இந்த படத்தில் ஹீரோ, வில்லன் மோதல் மிக முக்கியமாக, அவர்களின் வித்தியாசமான, வேறுபட்ட சிந்தனைகளால் நடப்பது தான். நான் என்ன நினைக்கிறேனோ, என்ன செய்கிறேனோ அது தான் சரி என நம்புகிறவன் நான். அதனால் தான் “என் கதையில நான் ஹீரோ டா” என்று வசனம் பேசுகிறேன்.

இயக்குனர் சிவா பற்றி அவர் கூறும்போது, “சிவா மிகவும் இனிமையானவர், அவரது புன்னகை எப்போதும் உண்மையானது. சில சமயங்களில், அவர் உணர்வுகளை தனக்குள்ளே மறைத்துவிட்டு வெளியில் பாஸிட்டிவாக நடந்துகொள்கிறாரா என நான் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறேன். இருப்பினும், அவரது மனது மிகவும் தூய்மையானது. அது தான் அவர் செய்யும் படங்களில் பிரதிபலிக்கிறது. நயன்தாரா ஒரு அழகிய பெண், எப்போதும் எளிமையாக இருப்பவர். எனக்கு ‘விஸ்வாசம்’ அணியுடன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வேலை செய்யும் வாய்ப்பு வந்தால் நான் ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்வேன். இந்த குழுவில் உள்ள எல்லோரும், நேர்மறையான, தூய்மையான, நல்ல இயல்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் பற்றி அவர் கூறும்போது, “அவர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கின்ற, தொழில்முறை தயாரிப்பாளர்கள். என் தந்தை தயாரிப்பாளராக இருந்த நாட்களிலிருந்தே அவர்கள் புகழ்பெற்ற பிராண்ட் என்று நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் என்னை அன்போடும், பாசத்தோடும் நடத்தியது அவர்கள் மீதான மரியாதையை மேலும் அதிகரித்தது” என்றார்.

ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்திருக்கிறார்கள். டி.இமானின் பட்டையை கிளப்பும் பாடல்களும், வெற்றியின் வணணமயமான ஒளிப்பதிவும், ட்ரைலரில் பார்த்த ரூபனின் வேகமான எடிட்டிங்கும், தமிழகத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் முழுவதும் திருவிழாவை துவக்கி வைத்திருக்கிறது.

Previous Post

கனா வெற்றிக்குக் காரணம் என்னுடைய நண்பர்கள் – சிவகார்த்திகேயன்!

Next Post

கடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்!

Next Post
கடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்!

கடைசி எச்சரிக்கை... பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்!

Popular News

  • ‘பிளாக் கோல்டு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.