ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

by Tamil2daynews
June 15, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 
Esthell Entertainer  நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”.
இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர்  R.விஜயகுமார்  இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் I லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
நடிகர் அமுதவாணன் பேசியதாவது…
பல மேடைகளில் பேசியுள்ளேன் ஆனால் இங்குப் பேசுவதற்குக் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, மேடையில் பெரிய ஆளுமைகள்  இருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். கதாநாயகன் லியோ சிவக்குமார் படத்தில் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்.  ஷுட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலப்பாக இருக்கும். எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,  நன்றி.
V J ஆண்ட்ரூஸ் பேசியதாவது…
இங்கு மேடையில் உள்ள ஆளுமைகளின் படைப்பிற்கு மிகப்பெரிய ரசிகன் நான், அவர்களுடன் அருகில் அமர்வது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது, நான் ஒரு படத்தில் நடித்து, அதற்காக மேடையில் பேசுவது இதுவே முதல் முறையாகும். லியோ சிவக்குமார் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார், சஞ்சிதாவிடம் இருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டேன். இந்தப்படம் ஒரு சிறப்பான வெற்றியை பெரும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன், நீங்களும் இப்படத்திற்கு  ஆதரவு தர வேண்டும், படக்குழு அனைவருக்கும் நன்றி.
நடிகை பானு பேசியதாவது…
இந்தப் படத்தில் நடிக்கும்போது ஒரு குடும்பத்தில் இணைந்த உணர்வு இருந்தது, அனைவரும் என்னை அக்கறையோடு பார்த்துக்கொண்டனர் , படம் அழகாக இருக்கிறது. உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும், அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் அசோக்குமார் பேசியதாவது.. 
வாய்ப்பளித்த விஜயகுமார் அவர்களுக்கு நன்றி. இப்படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் ராஜகோபால் பேசியதாவது… 
Esthell Entertainer சார்பில் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். லியோனி சார் கொரோனா காலகட்டத்தில் இந்தக் கதையைக் கொண்டு வந்தார். ஜேவியர் பிரிட்டோ அவர்களும் இந்தக்கதையை மிகச்சிறந்த கதை என்றார். கதை பிடித்துப்போனதால் கொரோனா என்றாலும் பரவாயில்லை என தயாரிப்பில் இறங்கி விட்டோம். லியோ சிவக்குமார் மிக அருமையான கதாபாத்திரம் செய்துள்ளார். படம் நல்ல படைப்பாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது…
என்னைப் பற்றி இப்போதும் நீங்கள் எழுதுகிறீர்கள். என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுக்கு என் நன்றிகள். கே எஸ் ரவிக்குமார் சார் ரசிகை நான், நீங்கள் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. நாயகன் சிவா ஃபேமிலி எப்போதும் செட்டில் இருப்பார்கள். என் அம்மாவிடம் என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக்கொள்கிறார்கள் என்றேன். ஷூட்டிங் அனுபவம் அப்படி தான் இருந்தது. லியோனி சார் பழக மிக இனிமையானவர். எனக்கு மிக முக்கியமான பாத்திரம்,  ஐடியில் வேலை பார்க்கும் சென்னைப்பெண், என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். ஒரு உதவி இயக்குநரின் வாழ்வை இந்தப் படம் மூலம் அறிந்துகொள்வீர்கள். ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…
பள்ளிக்காலத்திலிருந்தே லியோனி சார் ரசிகன் நான், அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும். இயக்குநர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது. மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். நாயகன் சிவா அவரிடம் பேச்சில் தெரியும் பணிவு, அவரின் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைய வேண்டும். படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது.  லியோனி சார் யார் மனதையும் காயப்படுத்தாதவர். அவர் மனது போலவே படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் R விஜயகுமார் பேசியதாவது
இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர், அவரின் உடன் பிறந்த தம்பி நான், அவருடன் 4 படங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டுமென்கிற நோக்கில், இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன். இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சார் அவர்களின் தீவிர ரசிகன் நான், அவர் என்னை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. கோவிட் காலத்தில் இந்தக்கதையை கடும் இன்னல்களுக்கிடையில் உருவாக்கினேன். மாமனிதன் படத்தில் சிவா ஒரு கதாப்பாத்திரம் செய்தார். அப்போது அண்ணன் இவன் ஒரு  ஹீரோ மெட்டீரியல், என்றார். அதை மனதில் வைத்து அவரை ஹிரோவாக்கினேன். இந்தப் படம் உருவாக முக்கிய காரணம் லியோனி அண்ணன், அவர்தான் தயாரிப்பாளரிடம் என்னை அனுப்பினார். சிவா இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார்.  அவர் தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிப்பார்.  இப்படம் மதுரையில் ஆரம்பித்து சென்னை நோக்கி நகரும் ஒரு கதை.  உதவி இயக்குநரின் வாழ்வைச் சொல்லும் கதை. பல நாயகிகள் இந்தக் கதையைக் கேட்டு தயங்கினார்கள் ஆனால் சஞ்சிதா ஷெட்டி கேட்டவுடன் நடிக்கிறேன் சார் என்றார். அவருக்கு நன்றி. அவருக்கு இந்தப்படம் ஒரு திருப்பமாக இருக்கும்.  Esthell Entertainer மற்றும் படத்தை வெளியிடும் Kannan Ravi Group நிறுவனத்திற்கு நன்றி. பிரபு சாலமன் சார் பிரபு சாலமானகவே நடித்துள்ளார் அவர் அலுவலகத்தையும் படப்பிடிப்பிற்கு தந்தார். அவருக்கு என் நன்றிகள். நட்புக்காக முதல் முறையாக விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே நடித்துள்ளார் அவருக்கு என் பெரிய நன்றி. சமூக நீதி பேசும் அழகான படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசியதாவது…
இந்த மேடை எனக்குக் கனவு , சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்ததற்கு, என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது, எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி, இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார்.  சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். , எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார், இந்த படம் எனக்கு முதல் படி அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.
திண்டுக்கல் I  லியோனி  பேசியதாவது…
கே எஸ் ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான் , என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன், இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள் , விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி, நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார், படக்குழு அனைவருக்கும் நன்றி, என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான்,  பல முயற்சிகள் செய்தான் அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும், படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
நடிகர்கள் 
லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன் மற்றும் விஜய் சேதுபதி.
தொழில் நுட்ப குழு 
தயாரிப்பு – Esthell Entertainer
வழங்குபவர் –  Kannan Ravi Group
இயக்கம் – R.விஜயகுமார்
இசை – ரகு நந்தன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத்தமிழின்
Previous Post

M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

Next Post

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் VD13 / SVC 54 படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது!

Next Post

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் VD13 / SVC 54 படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது!

Popular News

  • நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • நடிகை ஜெயலலிதாவை சித்ரவதை செய்தவர் யார்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

September 20, 2023

“சீரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

September 20, 2023

திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

September 20, 2023

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

September 20, 2023
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 18, 2023

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

September 18, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!