• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘தக்ஸ்’ திரைப்பட இசை ஆல்பத்தை, சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

by Tamil2daynews
November 1, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தக்ஸ்’ திரைப்பட இசை ஆல்பத்தை, சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. 

 

அதிரடி ஆக்சனுடன், ரத்தமும் சதையுமாக,  உருவாகியுள்ள  ‘தக்ஸ்’ திரைப்படத்தின் இசை ஆல்பத்தினை, புகழ்மிக்க இசை நிறுவனமான சோனி மியூசிக்  நிறுவனம் அனைத்து மொழிகளிலும்  வெளியிடுகிறது.
இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ள ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படம் இந்தி உட்பட பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் ‘RRR’, ‘விக்ரம்’, ‘டான்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை விநியோகம் செய்ததோடு, ‘மும்பைகார்’ என்ற இந்திப் படத்தைத் தயாரித்துள்ள ரியா சிபு, HR Pictures பேனரின் கீழ் இந்த ஆக்சன் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
‘புலி’, ‘இருமுகன்’, ‘ஏபிசிடி’, ‘சாமி ஸ்கொயர்’ போன்ற பெரிய திரைப்படங்களையும், சுமார் 100 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களையும் விநியோகித்த சிபு தமீன்ஸின் மகள் தான் தயாரிப்பாளர் ரியா சிபு.
‘தக்ஸ்’ திரைப்படத்தில் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ் காந்த், சரத் அப்பானி, அனஸ்வர ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நம்பிக்கைக்குரிய இளம் நடிகரான ஹிருது ஹாரூன் முதன்மை பாத்திரத்தில் இப்படம் மூலம், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் வெளியான ‘க்ராஷ் கோர்ஸ்’ என்ற அமேசான் நிகழ்ச்சியில் ஹிருது ஹாரூனின் நடிப்பு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. தற்போது விக்ரம் மாஸி, விஜய் சேதுபதி நடிக்கும்  இந்தி படமான ‘மும்பைகார்’ படத்தில்,  முதன்மை கதாப்பாத்திரங்களில் ஒன்றாக  இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் வட இந்திய மற்றும் தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இசை மற்றும் பட விளம்பரங்களை முன்னெடுக்க, சோனி மியூசிக் நிறுவனத்துடன் ‘தக்ஸ்’ திரைப்படம் இணைந்துள்ளது.
சமீபத்தில் ‘தக்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.  இசையமைப்பாளர் சாம் CS-ன் உணர்வுகளை கிளர்ச்சியுற வைக்கும் இசையுடன் வெளியான கதாபாத்திர க்ளிம்ப்ஸ் வீடியோ,  படம் குறித்தான ஆவலை  அதிகரித்துள்ளது.
RRR படத்தின் ப்ரோமோ எடிட்டிங் மூலம் பிரபலமான எடிட்டர் பிரவீன் ஆண்டனி, இந்த ஆக்‌ஷன் படத்தை எடிட் செய்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘தக்ஸ்’ திரைப்படம் டிசம்பர் 2022-ல் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
Previous Post

பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Next Post

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் ‘பெடியா’ திரைப்படத்தில் தான் ஏற்றுள்ள புதுமையான கதாபாத்திரம் குறித்தும், கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்தும் மனம் திறக்கிறார் வருண் தவான்

Next Post

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் 'பெடியா' திரைப்படத்தில் தான் ஏற்றுள்ள புதுமையான கதாபாத்திரம் குறித்தும், கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்தும் மனம் திறக்கிறார் வருண் தவான்

Popular News

  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘செவ்வாய்கிழமை’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கௌதம் மேனன் – கார்த்திக் – கார்க்கி கூட்டணியில் ‘கைலி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபர்ஹானா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களைத் தொடர்ந்து ‘விஜயம்’ – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது!

July 1, 2026

அந்தரன் – விமர்சனம்

July 1, 2026

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

July 1, 2026

ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது

July 1, 2026

மம்பட்டியான் ஸ்டார்ஸ் – வெப் தொடர் விமர்சனம்

July 1, 2026

மீசைய முறுக்கு தம்பி’ – ‘பாவி டீச்சர்’ நிஜ வாழ்க்கை ஜோடி!

July 1, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.