காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ஏக் லவ் யா
1000 கோடி வசூல் செய்யும் பான் இந்தியா ஆக்ஷன் படங்கள் வெளியாவது அதிகரித்தாலும், இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் காதல் கதைகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு.
எனவே, எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. அதிலும் காதலோடு தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப திரில்லரோடு வெளியான காதல் படங்களுக்கு வெற்றி உறுதி.
இதில் ஹீரோவாக புதுமுக நடிகர் ராணா நடித்துள்ளார். ஹீரோயினாக ரச்சிதா ராம் நடித்துள்ளார். இவர்களுடன் சரன்ராஜ் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா நானய்யா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது இப்படத்தின் கன்னட பதிப்பு ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏக் லவ் யா படத்தின் தமிழ் மற்றும் மலையாள பதிப்பை இவானியா புரொடக்ஷன்ஸ் மற்றும் பிலிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அபிலாஷ் நந்தகுமார் மற்றும் பிரசாத் கிருஷ்ணா தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார்கள்.