• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “ஜீப்ரா” !!!

by Tamil2daynews
February 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “ஜீப்ரா” !!! 
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் தாலி தனஞ்சயா இணைந்து இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த இரு நடிகர்களின் 26வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  (ஜனவரி 26) குடியரசு தினமான இன்று தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பை அறிவித்தனர்.
ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.  தலைப்பு அறிவிப்பு போஸ்டரில்  லோகோவுடன் ஒரு வேகமானி இணைக்கப்பட்டுள்ளது, அதில் நாம் செஸ் துண்டுகளைக் காணலாம். சதுரங்க ஆட்டத்தைப் போலவே  படமும் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். போஸ்டரில் உள்ள விஷயங்கள் முன்னணி கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனமான தன்மையைக் குறிக்கின்றன. போஸ்டரின் அத்தனை விசயங்களும் படைப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.
Padmaja Films Private Ltd and Old Town Pictures, சார்பில் எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஜெனிபர் பிசினாடோ கதாநாயகிகளாக நடிக்க, மூத்த நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சத்யா அகல, சுனில் ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
50 நாட்கள் முதல் ஷெட்யூலை முடித்திருக்கும் படக்குழு, மீதமுள்ள படப்பிடிப்பை ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. KGF, KGF2 போன்ற புகழ்பெற்ற படங்களின் இசையமைப்பாளர்  திரு.ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது முந்தைய படங்களைப் போல இப்படத்திற்கும் அவரது இசை மிகப்பெரும் பலமாக இருக்கும்.
இப்படத்தில் சுமன் பிரசார் பாகே இணை தயாரிப்பாளராகவும், சத்யா பொன்மர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள். மீராக் வசனம் எழுத, படத்தொகுப்பை அனில் கிரிஷ் கவனிக்கிறார்.
இந்த பான் இந்திய திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள்: சத்யதேவ், தாலி தனஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சத்யா அகல, சுனில் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு: எழுத்தாளர், இயக்குனர்: ஈஸ்வர் கார்த்திக் கூடுதல் திரைக்கதை: யுவா தயாரிப்பாளர்கள்: எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம்
தயாரிப்பு நிறுவனம் : Padmaja Films Private Ltd மற்றும் Old Town Pictures
இணை தயாரிப்பாளர்: சுமன் பிரசார் பாகே ஒளிப்பதிவு : சுமன் பிரசார் பேகே
இசை: ரவி பஸ்ரூர்
எடிட்டர்: அனில் கிரிஷ்
வசனங்கள்: மீராக்
சண்டைக்காட்சிகள்: சுப்பு
ஆடை வடிவமைப்பாளர்: அஸ்வினி முல்புரி, கங்காதர் பொம்மராஜு
மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், சிவா ( AIM )
Previous Post

”என் இனிய தனிமையே முதல் பாடல் இன்று வெளியீடு”

Next Post

ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள, இந்தியாவின் சுதந்திரம் குறித்து பரபரப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கக்கூடிய ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டரை குடியரசு தினத்தன்று வெளியிடுவதில் படக்குழு பெருமிதம் கொள்கிறது

Next Post

ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள, இந்தியாவின் சுதந்திரம் குறித்து பரபரப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கக்கூடிய 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டரை குடியரசு தினத்தன்று வெளியிடுவதில் படக்குழு பெருமிதம் கொள்கிறது

Popular News

  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0
  • அமரம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.