• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கே 13 படத்தில் நடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!

by admin
March 11, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கே 13 படத்தில் நடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரு சில படங்களில், முன்னணி கதாபாத்திரங்களுக்கு இணையாக மிக வலுவாக நிற்கும் ஒரு சில கதாபாத்திரங்கள் இருக்கும். இத்தகைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ‘திரில்லர்’ வகை படங்களில் அமையும். அந்த கதாபாத்திரங்கள் தான் விறுவிறுப்பாக படத்தை கொண்டு செல்ல தூண்டுதலாக அமையும். அந்த வகையில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கும் ‘கே13’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இது குறித்து இயக்குனர் பரத் நீலகண்டன் கூறும்போது, “ஸ்கிரிப்ட்டை முடித்தவுடன், இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நல்ல நடிகரை தேடிக்கொண்டிருந்தேன். இந்த படத்தில் முழு திரில்லர் விஷயங்களையும் இந்த கதாப்பாத்திரம் தான் தூண்டுகிறது. தனிப்பட்ட முறையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என நான் உணர்ந்தேன். அவரிடம் இணை இயக்குனர்களாக இருக்கும் என் நண்பர்கள் மூலம் அவரை அணுகினேன். அவர் நடிக்கும் காட்சிகளில் நடிகை காயத்ரியும் இருந்தார், இருவருமே மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். இப்போது கூட, நாங்கள் இந்த குறிப்பிட்ட காட்சியை படம் பிடித்ததை பற்றி நினைக்கும்போது, அது உற்சாகத்தை கொடுக்கிறது. இந்த படத்தின் முதல் ஷாட் அது தான், அனுபவம் வாய்ந்த இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், காயத்ரி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் வேலை வாங்குவது ஒரு பெரிய சவாலாக இருந்தது” என்றார்.
ஆதிக் ரவிச்சந்திரன் பற்றி இயக்குனர் பரத் கூறும்போது, “ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் ஒரு மிகச்சரியாக நடித்துக் கொடுத்தார்.படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் மற்றும் பாராட்டப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த கே13 படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். தாமரை பாடல் எழுதுகிறார், ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்குனராக பணிபுரிய, சுதேஷ் சண்டைப் பயிற்சியை கையாண்டிருக்கிறார்.
Tags: அருள்நிதிசாம் சி.எஸ்ஸ்ரத்தா ஸ்ரீநாத்
Previous Post

‘பரியேறும் பெருமாள்’ புகழ் கருப்பி நாய் நடிக்கும் ‘ஆத்தா’

Next Post

உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

Next Post
உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.