• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள பிரித்விராஜின் `லூசிஃபெர் ‘ படத்தில் நடிக்கும் மோகன்லால் !!

by admin
March 9, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள பிரித்விராஜின் `லூசிஃபெர் ‘ படத்தில் நடிக்கும் மோகன்லால் !!
0
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் பிரித்விராஜ் மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர் . தமிழ் தெலுங்கு , பாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.தமிழ் சினிமாவில் கனா கண்டேன் படத்தில் அறிமுகமாகிய இவர் பாரிஜாதம் , மொழி , அபியும் நானும் , ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் , பாடகர் , தயாரிப்பாளர் என அனைத்து பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். .

இயக்குனராக இவர் இயக்கும் முதல் படம் ‘லூசிஃபெர் ‘. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தளபதி விஜய் உடன் ஜில்லா , சூர்யாவுடன் காப்பான் போன்ற படங்களில் தமிழ் நடித்து இருக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் விவேகம் புகழ் விவேக் ஓபராய் , மாரி 2 புகழ் டோவினோ தாமஸ் , இந்திரஜித், ஜான் விஜய் ,சுரேஷ் மேனன் , கலாபவன் சாஜன் ஆகியோருடன் பிரித்விராஜ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் , திரைக்கதை ஆசிரியர், பாடகரான முரளி கோபி அவர்கள் இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.

புலிமுருகன் படத்திற்கு வசனம் எழுதிய R P பாலு இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் சாதுமிரண்டா படத்திற்கு இசையமைத்த தீபக் தேவ் இப்படத்திற்கு இசையமைக்க, சம்ஜித் முஹமது படத்தொகுப்பினை மேற்கொள்கிறார். கலை இயக்கம் மோகன் தாஸ் , சண்டைப்பயிற்சி ஸ்டண்ட் சில்வா , நடனம் தினேஷ் .

இத்திரைப்படம் தமிழ், மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அரசியல் கலந்த த்ரில்லர் படம்.இந்திய அரசியல் படமாக இருக்கும் இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் அரசியல் தொடர்புகளை இப்படம் பேச இருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் . கொச்சின், மும்பை , லட்சதீவு , பிரான்ஸ் , ரஷ்யா ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது .

நடிகர்கள் :

மோகன்லால் ,
பிரித்விராஜ் ,
மஞ்சு வாரியார் ,
விவேக் ஓபராய் ,
டோவினோ தாமஸ் ,
இந்திரஜித்,
ஜான் விஜய் ,
சுரேஷ் மேனன் ,
கலாபவன் சாஜன்

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – பிரித்விராஜ் ,
தயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ் – மோகன்லால் , ஆண்டனி பெரும்பாவூர்
கதை & திரைக்கதை – முரளி கோபி
வசனம் – R P பாலு
ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ்
இசை- தீபக் தேவ்
படத்தொகுப்பு -சம்ஜித் முஹமது
கலை இயக்கம் -மோகன் தாஸ் ,
சண்டைப்பயிற்சி -ஸ்டண்ட் சில்வா ,
நடனம்- தினேஷ்

Tags: இந்திரஜித்கலாபவன் சாஜன்சுரேஷ் மேனன்பிரித்விராஜ்மஞ்சு வாரியார்ஜான் விஜய்
Previous Post

சிறப்பாக பாடிய சியான் விக்ரம்! களைகட்டும் கடாரம் கொண்டான்

Next Post

நீயா 2′ இயக்குநர் எல்.சுரேஷ் – யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்

Next Post
நீயா 2′ இயக்குநர் எல்.சுரேஷ் – யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்

நீயா 2' இயக்குநர் எல்.சுரேஷ் - யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம் – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.