• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

இயக்குனர் கண்ணன் இயக்கும் காதல் கதையில் நடிக்கும் அதர்வா முரளி & அனுபமா பரமேஸ்வரன்

by admin
July 3, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
இயக்குனர் கண்ணன் இயக்கும் காதல் கதையில் நடிக்கும் அதர்வா முரளி & அனுபமா பரமேஸ்வரன்
2
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


இயக்குனர் கண்ணனின் இயக்குநர் பயணம் பன்முகப்படுத்தப்பட்ட வகை படங்களை உள்ளடக்கியது மற்றும் ஒரு போதும் சிறந்தவற்றை கொடுக்க அவர் தவறியதில்லை. குறிப்பாக, குடும்ப உறவுகளுடன் அழகான காதல் கதைகளை இணைப்பதில் அவரது திறமை ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது சமீபத்திய திரைப்படங்கள் முற்றிலும் தீவிரமான மற்றும் சிக்கலான கருப்பொருள் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து சற்று விடுபட்டு குடும்ப கூறுகளுடன் கூடிய அழகான, புத்துணர்ச்சியூட்டும் காதல் கதைகளுக்கு திரும்புகிறார்.

இது குறித்து இயக்குனர் கண்ணன் கூறும்போது, “ஆம், பார்வையாளர்களுக்கு இடைவிடாமல் தீவிரமான மற்றும் சிக்கலான கதைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன, அதில் எனது படங்களும் அடங்கும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த மண்டலத்திலிருந்து விலகி ஒரு காதல் கதையை கொடுக்க விரும்பினேன். இதே எண்ணம் அதர்வா முரளிக்கும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அழகான நடிகராக பாராட்டப்பட்ட அவரின்  கதாபாத்திரங்கள், பெரும்பாலும் தனித்துவமான மற்றும் சவாலானவையாகவே இருந்துள்ளன, எங்களின் கடைசி படமான ‘பூமராங்’ உட்பட. இருப்பினும், இந்த படம் அவரை ஒரு இளமையான கதாபாத்திரத்தில் சித்தரிக்கும். அவர் பிஎச்டி மாணவராக நடிக்கிறார்.

நாயகியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் குறித்து இயக்குனர் கண்ணன் கூறும்போது, “அவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக நடிக்கிறார். நாங்கள் உண்மையில் கண்களால் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு நடிகையை விரும்பினோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அதர்வா மற்றும் அனுபமா இருவரையும் ஒன்றாக ஒரு ஃபிரேமில் கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. இந்த படம் குடும்ப உணர்வுகளை கொண்ட ஒரு ஜாலியான படமாக இருக்கும்” என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் சென்னையில் தொடங்கப்பட உள்ளது. மேலும் வெளிநாட்டில் மிகவும் அழகான இடங்களில் ஒரு பகுதியை படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘96’ படத்தில் காட்சி மொழி மூலம் நம் மனதை ஈர்த்த சண்முக சுந்தரம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். மேலும் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இது குறித்த முறையான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விரைவில் வெளியாகும். ஆர்.கண்ணன் எழுதி, இயக்குவதோடு எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Previous Post

இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில், மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்”

Next Post

கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ”யாதெனக் கேட்டேன்”

Next Post
கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ”யாதெனக் கேட்டேன்”

கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ”யாதெனக் கேட்டேன்”

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.