• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

ஒரு நல்ல கதை தனக்குரிய திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் என்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

by admin
March 15, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
ஒரு நல்ல கதை தனக்குரிய திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் என்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
0
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜனரஞ்சகமான மசாலா சமாச்சாரங்களை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் திரைக்கு வந்த சில நாட்களிலேயே  தடமில்லாமல் மறைந்து போவதை நாம் கண்டிருக்கிறோம். ஒரு சில இயக்குநர்களே தங்கள் திறமையை தடமாக பதிப்பதில் முனைப்போடு இருப்பார்கள்.  இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. விரைவில் வெளிவர இருக்கும் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் ஜனரஞ்சகமும், சிந்தனையை தூண்டும் கருத்தும் ஒருங்கே கொண்ட படமாகும்.
“ஆரோகனம்” மற்றும் “அம்மினி” ஆகிய படங்களின் மூலம் எல்லாத்தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் “ஹவுஸ் ஒனர்” சமிபத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
“ வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது  மனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி செல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்தியேக காட்சிகளுக்கு அழைப்பேன். அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும் மரியாதையும் அளவிட முடியாது.
‘ஆடுகளம்’ கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார்.  பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  இவர் நடிப்பை பார்த்தவுடன், நடிப்புப் கூட பரம்பரை சொத்துதான் என கருத்து தோன்றும்.  எனது தோழி விஜயலக்ஷ்மியும் அவளது சகோதரி சரிதாவும் லவ்லினுடைய திறமையை எண்ணி பெருமைப்படலாம்.  ‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக தேசியவிருது பெற்றவரும்,  ‘கோலிசோடா’ படத்தில் மிக பிரமாண்டமாக நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாம் சராசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு அம்மாவை ஶ்ரீரஞ்சனி பிரதிபலித்திருக்கிறார்.
தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன்.  மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார்.  பாடல்களுக்கு  உயிருட்டும் விதமாக சின்மயி,  சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர்.  ‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார்.  கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவாளராகவும்,  தபஸ் நாயக் ஆடியோகிராபியும் கையாண்டுள்ளனர்.  இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.  கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன,  அந்த வரிசையில்  இந்தப்படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்” என்று பெருமையுடன் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
Previous Post

இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் சங்கீதா!

Next Post

உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’ 

Next Post
உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’ 

உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் 'குச்சி ஐஸ்' 

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

    8 shares
    Share 8 Tweet 0
  • கில்டு சங்கம் மூடப்படவில்லை – விளக்கம் அளித்த ஜாகுவார் தங்கம்!

    2 shares
    Share 2 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.