• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’

by admin
July 2, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’
தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமானப் படைத்திருக்கின்றனர்.

முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில், ஸ்கேட்டிங் பயிற்சியாளராக தனது பணியை துவக்குகிறார். கூடுதல் மாணவர்களை ஈர்க்கும் விதத்தில், ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஒன்றை வடிவமைத்து, தனது மருமகளுடன் விநியோகித்து வருகிறார். இந்நிலையில் அவரது பள்ளிப்பருவ காதலன் ஆரன் நோபிள் தனது மருமகளை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ப்பதற்காக கோர்ட்னியை சந்திக்கிறார். காரணம் சொல்லாமல் பிரிந்து சென்ற பள்ளிப்பருவ காதலன் ஆரன், அதன் பாதிப்புகளில் இருந்து போராடி மீண்டு, வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருக்கும் கோர்ட்னி, பல ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பு, அதன் தாக்கம் என்ன, அவர்கள் வாழ்வில் நடந்ததென்ன, காதலர்கள் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.

உணர்வுகளின் கொந்தளிப்பில் இருக்கும் பள்ளிப்பருவ காதலுக்கும், வாழ்வின் யதார்த்தங்களும், நிதர்சனங்களும் புரிந்த நிலையில் அதனை அணுகும் போதும் உள்ள வித்தியாசத்தையும் மிகவும் நளினமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டானியல்.

இப்படத்தில் கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோருடன் இணைந்து, ஏஜண்ட் குமார் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு டாம் ரோட்ஸ், ட்ரூ ஜாகப்ஸ் ஆகியோரின் உன்னதமான பங்களிப்புடன் சியன் ஆண்டனி கிஷ் இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் மிச்சிகன் மாகாணத்தின் எழில் கொஞ்சும் ஏரிகள், பச்சை புல்வெளிகள், டெட்ராய்ட் நகரின் நவீன தொழில்துறை மையங்கள், தனித்துவமான நான்கு பருவநிலைகள் என மிகவும் பிரமிப்புடன் ரசிக்கதக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

கிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
கோர்ட்னி மாத்யூஸ்
ஆரன் நோபிள்
‘மாவீரன்’ நெப்போலியன்
ஷீனா மோனின்
ராபர்ட் லெனன்
மற்றும் பலர்.
தயாரிப்பு: கிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள்:
நிர்வாக தயாரிப்பாளர்கள்: மார்க் நட்சன், மிஷல் நட்சன், டெல். கே கணேசன், ஜி பி டிமொதியோஸ்
சவுண்ட் டிசைன்- தாமஸ் லேஷ்
இசை- சீன் ஆண்டனி கிஸ்க்
ஒளிப்பதிவு,எடிட்டிங் &இயக்குனர்:டானியல் நட்சன்

Previous Post

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்ட் இணைந்து தயாரிக்கும்“சென்னை டூ பாங்காக்”

Next Post

வீணை மேஸ்ட்ரோ கலைமாமணி ராஜேஷ் வைத்யா ’60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகள்’ வாசித்து புதிய ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை

Next Post
வீணை மேஸ்ட்ரோ கலைமாமணி ராஜேஷ் வைத்யா ’60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகள்’ வாசித்து புதிய ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை

வீணை மேஸ்ட்ரோ கலைமாமணி ராஜேஷ் வைத்யா '60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகள்' வாசித்து புதிய ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை

Popular News

  • அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிங்காரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.