• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

ரசிகரின் ஏற்பாட்டில் சுசீலாவிற்கு பிரம்மாண்ட பாராட்டு விழா!

by admin
March 28, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
ரசிகரின் ஏற்பாட்டில் சுசீலாவிற்கு பிரம்மாண்ட பாராட்டு விழா!
3
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா. தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்மொழியில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக்குருவிகள் அழிந்து போனாலும் அவர் பாடிய ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலும் பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் ஒருக்காலும் அழியாது.

1953 -ல் “பெற்றதாய்” படத்தில் பாடகியாக அறிமுகமான அவர் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற மறக்க முடியாத பாடல்கள் உள்பட இந்திய மொழிகளில் மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக பத்மபூசன் விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும் 5 முறை தேசியவிருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84. ஆனால் இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்ட சாதனைப் பாடகி சுசீலா அவர்களுக்கு லயா மீடியா சார்பாக அவரின் அதி தீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார்.
இவர் ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜுவிற்கு ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தி இருக்கிறார். பொதுவாக ரசிகர்கள் கைதட்டுவார்கள் சில பேர் பால் அபிஷேகம் செய்வார்கள் ஆனால் இவரோ பாராட்டு விழா நடத்துகிறார் என்றால் சுசீலா அவர்களின் புகழ் வானுயர்ந்ததே. மே மாதம் 19-ஆம் தேதி அன்று சென்னை பல்கலைகழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இசை பேரரசிக்கு மகுடம் சூட்டும் இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசை திருவிழாவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Previous Post

Ayogya Movie Stills

Next Post

தனுஷின் 34வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா!

Next Post
தனுஷின் 34வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா!

தனுஷின் 34வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் “எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.