• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஹரா’ படத்தில் நாயகனாகவும் ‘தளபதி 68’ல் எதிர் நாயகனாகவும் ஒரே சமயத்தில் அதிரடியாக கலக்கும் மோகன்

by Tamil2daynews
October 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஹரா’ படத்தில் நாயகனாகவும் ‘தளபதி 68’ல் எதிர் நாயகனாகவும் ஒரே சமயத்தில் அதிரடியாக கலக்கும் மோகன்

 

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாயகனாக மோகன் நடிக்கிறார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி ‘ஹரா’ திரைப்படத்தில் நாயகனாக மோகன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மென்மையான பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனியிடம் பிடித்த மோகன், ‘ஹரா’வில் அதிரடி வேடத்தில் நடிக்கும் நிலையில், திரைப்படத்தின் முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதன் அடுத்தக் கட்ட நகர்வாக, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக மோகன் நடிக்கிறார்.

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹரா’ படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘ஹரா’ படத்தை தொடர்ந்து ‘ஜோசப் ஸ்டாலின்’ என்ற பான்-இந்தியா திரைப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் டப்பிங் செய்யப்படவுள்ள, மிகவும் வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள்.

‘ஹரா’ திரைப்படத்தில் சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், யோகி பாபு, அனுமோல், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
Previous Post

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் 80-ஸ் பில்டப்

Next Post

‘ஆண்டனி’ படத்தின் அதிகார்வப்பூர்வ டீசர் தற்போது வெளியாகி உள்ளது!

Next Post
‘ஆண்டனி’ படத்தின் அதிகார்வப்பூர்வ டீசர் தற்போது வெளியாகி உள்ளது!

'ஆண்டனி' படத்தின் அதிகார்வப்பூர்வ டீசர் தற்போது வெளியாகி உள்ளது!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.