• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் “நித்தம் ஒரு வானம்”…

by Tamil2daynews
February 7, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Ashok Selvan is a 100 kg chef in his Telugu debut | Tamil Movie News - Times of Indiaபாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும்
கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார்.“நித்தம் ஒரு வானம்” நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட  திரைப்படமாக உருவாகி வருகிறது.  அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று வெளியிட்டார்.
திரு.அஜித் அந்தரே, COO Viacom18 Studios படம் குறித்து கூறுகையில்..,
“Viacom18 Studios தயாரிப்பில், பல தளங்களிலும் மொழிகளிலும் தரமான கதைகள் சொல்ல முடியும் என நம்புகிறோம். எங்கள் தயாரிப்பில் சமீபத்திய தமிழ் மற்றும் தெலுங்கு படைப்புகளின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக இருமொழிகளிலும் இதயம் கவரும் ஒரு அழகான படைப்பை உருவாக்கியுள்ளோம். திறன் மிகுந்த நடிகர்கள், திறமையான புதிய இயக்குனர் மற்றும் அதீத திறமை கொண்ட தயாரிப்பாளர் குழுவுடன்,  உருவாகும் ‘நித்தம் ஒரு வானம்’ (தமிழ்) மற்றும் ‘ஆகாஷம்’ (தெலுங்கு) என இரண்டு படங்களும் பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும், பல சாதனைகளை தகர்க்கும் என்று நம்புகிறோம்”.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என  இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க,  விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
தயாரிப்பாளர் – ஸ்ரீநிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ்
இயக்குநர் – Ra.கார்த்திக்
ஒளிப்பதிவு – விது அய்யனா
இசை – கோபி சுந்தர்
கலை – எஸ். கமலநாதன்
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைப் பயிற்சி – விக்கி
எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் – S.வினோத் குமார்
நடனம் – லீலாவதி குமார்
பாடல்கள் – கிருத்திகா நெல்சன்
Previous Post

மக்களுக்காக தொடர்ந்து போராடும் “நாம் தமிழர்” சீமான்…

Next Post

கபிலன் வைரமுத்து படைப்புகள்

Next Post

கபிலன் வைரமுத்து படைப்புகள்

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.