‘மார்க் ஆண்டனி’ – விமர்சனம்
படம் மார்க் ஆண்டனி.
விஞ்ஞானியான சிரஞ்சீவி,(செல்வராகவன்) தொலைபேசி டைம் ட்ராவல் கருவியை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு போன் பேசி எதிர்காலத்தை மாற்ற முடியும். இந்த கருவி, 1975களில் கேங்ஸ்டர்களாக வலம் வரும் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) மற்றும் ஆண்டனி (விஷால்) ஆகிய இருவரையும், ஜாக்கியின் மகனான மதன் பாண்டியனையும், ஆண்டனியின் மகனான மார்க் ஆண்டனியின் வாழ்க்கையையும் எப்படி பல்வேறு ட்விஸ்ட்களுக்கு உள்ளாக்குகிறது என்பதே படத்தின் கதை.
அதன் பின் வரும் இரண்டாம் பாதி, மார்க் ஆண்டனியின் ரெட்ரோ வைப்பிற்குள் ரசிகர்களை கொண்டு சென்று கொண்டாட வைக்கிறது.
டைட்டில் ‘நடிப்பு அரக்கன்’ என்ற பட்டத்தோடு வருகிறார் எஸ் ஜே சூர்யா படம் பார்க்கும் அனைவருக்கும் அது உண்மையாகவே தெரிகிறது.
அதேசமயம் ஹீரோவான விஷால் தனக்கு கொடுக்கப்பட்ட இரு கதாபாத்திரங்களுக்கு இன்னும் சற்று வித்தியாசத்தை காட்டி இருக்கலாம்.
விஷால் இப்போதுதான் நடிக்க தொடங்கியிருக்கிரார் .
படத்தில் வெறும் மூன்றே மூன்று பாடல்கள்தான் ஆனால் அதைப்பற்றி பேச எதுவும் பெரிதாக இல்லை. “வருது வருது விலகு விலகு”, “அடியே மனம் நில்லுனா நிக்காதடி”, “கண்னை நம்பாதே”, “பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி” ஆகிய பழைய பாடல்கள் இடம்பெற்றுள்ளது. பழைய பாடல்களை சூப்பராக ரீமேக் செய்து, படத்திற்கு தனி வைப்பை கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
ஆனால் பின்னணி இசையில் ஏமாற்றியுள்ளார். படம் முழுவதும் ஒரு இரைச்சல் சவுண்ட் வருவதை தவிர்த்து இருக்கலாம்.
செய்து ரசிக்கலாம். டைம் மிஷின் தொடர்பான காட்சிகளை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக காண்பித்து இருக்கலாம். ஆகமொத்தம், படம் பெயர்தான் மார்க் ஆண்டனி. ஆனால் ஸ்கோர் செய்தது அப்பனும் மகனுமான ஜாக்கியும் மதனும்தான்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படங்களின் கதைகள் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததோடு, குடும்பத்தோடு காண முடியாத நிலையும் இருந்தது. ஆனால் இந்த முறை தன் மீதான குற்றச்சாட்டை போக்க குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று இந்த விடுமுறையை கொண்டாடும் வகையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வழங்கியுள்ளார் ஆதிக்.
மொத்தத்தில் படத்தின் தலைப்பான ‘மார்க் ஆண்டனி’ யை எஸ்.ஜே .சூர்யா கேரக்டருக்கு வைத்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்.