• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

by Tamil2daynews
May 30, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

 

தெளிவான திட்டமிடலுடன் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை மக்கள் வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதைஷார்ட்ஸ்

சென்னை, மே 29, 2026: வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் – ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை  கரண் தயாநிதி மாறன் இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
Image‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதைஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது. தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பேசிய கதைஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.
Imageகதைஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.

கதைஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், “சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று தெரிவித்தார்.

பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதைஷார்ட்ஸ்  செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

12,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ-டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.

2027 மார்ச் மாதத்திற்குள் 4,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதைஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதைசொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.

Previous Post

காட்டாளன் – விமர்சனம்

Next Post

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

Next Post

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.