• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“உலகின் உயரடுக்கு படைகள் பயன்படுத்தும் ஆயுதங்களை ‘டைகர் 3’ல் பயன்படுத்த நாங்கள் பாடுபட்டோம்” ; மனீஷ் சர்மா

by Tamil2daynews
November 9, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“உலகின் உயரடுக்கு படைகள் பயன்படுத்தும் ஆயுதங்களை ‘டைகர் 3’ல் பயன்படுத்த நாங்கள் பாடுபட்டோம்” ; மனீஷ் சர்மா  

 

இந்தியா இதுவரை உருவாக்கிய மிகப்பெரிய ஆக்சன் சூப்பர் ஸ்டார்களில் சல்மான் கானும் ஒருவர். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் வரிசையில் லேட்டஸ்ட் வரவான ‘டைகர் 3’ல் அவர் மீண்டும் தனது டைகர் என்கிற  உளவாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இருக்கை நுனியில் அமரவைக்கும் கண்கவர் ஆக்சன் படமான இதில் உலகெங்கிலும் உள்ள உயரடுக்கு படைகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்கிறார் மனீஷ் சர்மா. இந்தப்படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கண்கவரும் விதமாக பிரமாண்ட அளவில் ஒரு படத்தை தரவேண்டும் என யஷ்ராஜ் பிலிம்ஸ் விரும்பியது.
மனீஷ் சர்மா கூறும்போது,
“இந்த படத்தை நாங்கள் உருவாக்க துவங்கியபோது எங்கள் மனதில் இருந்த ஒரே விஷயம் ‘பிரமாண்டம்’. நாங்கள் பலதரப்பட்ட டாங்கிகள், ஹெலிகாப்டர் துப்பாக்கிகள், மிகப்பெரிய ஏவுகணைகள், லட்சக்கணக்கான தோட்டாக்கள் உள்ளிட்ட இன்னும் பலவற்றை ஒரே ஒரு ஆக்சன் காட்சியில் மட்டுமே பயன்படுத்தி உள்ளோம். டைகரின் இந்த வெடிகுண்டு தருணத்தை அனுபவித்து மகிழவேண்டும் என்பதற்காக உலகின் உயரடுக்கு படைகள் பயன்படுத்தும் ஆயுதங்களை ‘டைகர் 3’ல் பயன்படுத்த நாங்கள் பாடுபட்டோம். அதனால்  இது வியப்பானதாகவும் மிகப்பெரியதாகவும் அற்புதமாகவும் இருப்பதோடு அனைத்துமே உண்மையாகவும் இருக்கும்” என்கிறார்.

இயக்குநர் மனீஷ் சர்மா மேலும் கூறும்போது,
“படம் பார்க்கும் மக்கள் ஆக்சன் காட்சிகள் பற்றி நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற விதமாக அவற்றை உருவாக்க விரும்பினோம். சல்மான் கான் என்கிற டைகரின் கை ஓங்குவதை நீங்கள் பார்க்கும்போது ஆக்சனுக்காக எங்களது லட்சியங்கள் எந்த அளவுக்கு அதிகமாக இருந்தது என்பதை புரிந்து கொள்வீர்கள் என நான் நினைக்கிறேன். வரும் ஞாயிறன்று திரையரங்குகளில் இதுபோன்ற கண்கவர் ஆக்சன் காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் தங்களை மறந்து இருக்கையில் இழுத்து பிடித்தது போல அமர்ந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்கிறார்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டைகர் 3’ ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக வரும் நவ-12ஆம் தேதி ஞாயிறன்று வெளியாக இருக்கிறது. ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் என பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களுக்கு பிறகு யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் வரிசையில் இது 5வது படமாகும்.

Previous Post

பிரைம் வீடியோ தனது அடுத்த உலகளவிலான ப்ரீமியர் வெளியீடாக தமிழ் ஒரிஜினல் திகில், தொடரான தி வில்லேஜ் திரைப்படம் நவம்பர் 24 அன்று வெளியிடப்படுவதை அறிவித்தது ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்கத்தில் தி வில்லேஜ் படம் உருவாகியிருக்கிறது

Next Post

லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.