• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

19 திரைப்பிரபலங்கள் வெளியிட்ட ‘கிராண்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

by Tamil2daynews
November 24, 2021
in சினிமா செய்திகள்
0
19 திரைப்பிரபலங்கள் வெளியிட்ட ‘கிராண்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம்  என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு
‘கிராண்மா’ என்கிற படம்
உருவாகியுள்ளது.இப்படத்தை  GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள்  ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர்.
ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.
மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ்  முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தின் மீது படக்குழு வைத்துள்ள நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரையுலகின் பிரபலங்கள்    சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா ,சூர்யா ஜே. மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா , மரினா மைக்கேல் , கோகுல்சுரேஷ் , சரத் அப்பானி,ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள்
தங்கள் சமூக ஊடகங்களில் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் படத்தைப் பல மடங்கு மேலே கொண்டு சென்று விட்டார்கள்.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சி பற்றித் தயாரிப்பாளர் ஜெயராஜ் கூறும்போது,

“முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அன்புடன் வெளியிட்டுள்ள திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களது அன்பு  அளவிட முடியாதது. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக உணர வைக்கிறது .
இந்த நிகழ்வு
படத்தைப் பலமடங்கு வெளிச்சத்துக்குக்  கொண்டு சென்றுள்ளது.

படத்தின் ஆடியோ ,டிரைலர் விரைவில் வெளியாக இருக்கின்றன.படத்தை உலக அளவில் திரையரங்குகளில் வெளியிடும் திட்டங்களை விரைவில்  அறிவிக்க இருக்கிறோம்.”என்றார்.

படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ்  பேசும்போது,
” முதலில் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பட வாய்ப்பை அளித்த என் தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 19 பிரபலங்கள் தங்கள் அன்பையும் ஆதரவையும் காட்டும் வகையில், தங்களது சமூக ஊடகங்களில்  வெளியிட்டுள்ளது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இதை எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய தொரு வெற்றியாக நான் உணர்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் புது அனுபவமாக இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.படத்தில் பணியாற்றிய  நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே தங்களது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள்.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு எங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தி உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ” என்றார்.

‘கிராண்மா’ கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட  சோனியா அகர்வால் ,சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு – யஸ்வந்த் பாலாஜி .கே , எடிட்டிங் – அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை – அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம்,ஸ்டண்ட் – முகேஷ் ராஜா,

சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது. திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ‘கிராண்மா’  விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது

Previous Post

“குருப்”  படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா மகிழ்ச்சி !

Next Post

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகிறது,  நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம் !

Next Post
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகிறது,  நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம் !

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகிறது,  நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம் !

Popular News

  • ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.