• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அட்லீ & பிரியா அட்லீ

by Tamil2daynews
December 16, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அட்லீ & பிரியா அட்லீ

 

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ.  அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ,  ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார். இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் “ஜவான் ” படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.
இயக்குனர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்கை, இவர்களை தாண்டி ரசிகர்களுக்கும் வியக்கும் வண்ணம் இருக்கிறது. இவர்களது காதல் வாழ்கையின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகும் போது, அதை பார்த்த ரசிகர்கள், அவர்களது காதலை கண்டு சந்தோசத்தில் பூரிக்கும் நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது.
இப்படி காதலில் திளைத்த இந்த தம்பதி தங்களது வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒரு உறுப்பினரை சேர்க்க போகும் மகிழ்ச்சியில் இருவரும் திளைத்து இருக்கின்றனர். பலவித உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இந்த தருணத்தில்,  இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிர்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.  எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொள்கின்றனர்..
“சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு  இருக்கிறோம். ” – அட்லீ & பிரியா அட்லீ
Previous Post

2-வது முறையாக பொட்டன்ஷியல் நிறுவனத்துடன் இணையும் ஜீவா: மணிகண்டன் இயக்குகிறார்!

Next Post

டெரர் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கும் அங்காரகன்

Next Post

டெரர் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கும் அங்காரகன்

Popular News

  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.