2-வது முறையாக பொட்டன்ஷியல் நிறுவனத்துடன் இணையும் ஜீவா: மணிகண்டன் இயக்குகிறார்!
‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’ என ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைகளைக் கொடுப்பதில் முன்னணியாக இருப்பது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம். தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தயாரித்து வருகிறது.
தங்களது அடுத்தப் படத்தின் பூஜையை இன்று விமரிசையாக நடத்தியுள்ளது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம். வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகும் இதில் நாயகனாக ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை டைரக்டர் செல்வராகவன் உதவியாளர் மணிகண்டன் இயக்கவுள்ளார்.


முன்னதாக பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். இதில் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.