ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

by Tamil2daynews
October 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

 

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பான ‘பிரமயுகம்’ அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரமயுகம்’ ஆகஸ்ட் 17, 2023 முதல் ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட படக்குழு இப்போது போஸ்ட்  புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக உள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மிக விரைவில் படத்தின் மார்க்கெட்டிங் பணிகளைத் தீவிரமாக தொடங்கவுள்ளது.

‘பிரமயுகம்’ மிகவும் எதிர்பார்க்கப்படும் பன்மொழி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மம்முட்டியின் தோற்றம் அடங்கிய போஸ்டர் செப்டம்பரில் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக, மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான ‘கண்ணூர் ஸ்காவ்ட்’ படம் வெற்றிப் பெற்றதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கியக் காரணம்.
மம்முட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் ‘பிரமயுகம்’. ஹாரர்- த்ரில்லர் படங்களைத் தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பேனரின் கீழ் தயாரிக்கப்படுகின்ற முதல் திரைப்படமாக ‘பிரமயுகம்’ அமைந்ததில் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பெருமை கொள்கிறது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இணைந்து ‘பிரமயுகம்’ படத்தை வழங்குகின்றன.

சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ்.சஷிகாந்த் தயாரித்த ‘பிரமயுகம்’ படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்ள நடித்துள்ளனர். மேலும் ஷேனாத் ஜலால் ஒளிப்பதிவாளராகவும், ஜோதிஷ் ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் ஷஃபிக் முகமது அலி எடிட்டராகவும் கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். படத்திற்கு டி.டி.ராமகிருஷ்ணன் வசனம் எழுத, ரோனெக்ஸ் சேவியரின் ஒப்பனை மற்றும் மெல்வி ஜே ஆடைகளையும் கவனித்துள்ளனர்.

Previous Post

‘அவனிடம் சொல்வேன்’ : குழந்தைகள் மீதான போரின் தாக்கத்தை விளக்கும் பாடல்

Next Post

அல்லு அர்ஜுன் 69வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று வரலாறு படைத்தார்

Next Post

அல்லு அர்ஜுன் 69வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று வரலாறு படைத்தார்

Popular News

  • படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது வென்ற தமிழ் மற்றும் மலையாள இயக்குநர் பைஜு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘காந்தாரா -சாப்டர்1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில் அன்ச்செயின்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் மும்பையை பின்னணியாக கொண்ட விறுவிறுப்பான திரைப்படம் ‘மான்குர்த்’ வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள காந்தாரா அத்தியாயம் 1 பர்ஸ்ட் லுக்!

எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள காந்தாரா அத்தியாயம் 1 பர்ஸ்ட் லுக்!

November 28, 2023

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

November 28, 2023

‘காந்தாரா -சாப்டர்1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியீடு

November 28, 2023

’லேபிள்’ வெப்சீரிஸை தொடர்ந்து புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்

November 28, 2023

படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

November 28, 2023

பான் இந்தியா ஆக்ஷன் படமாக கவனம் ஈர்க்கும் ஹரோம் ஹரா

November 28, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!