இசையமைப்பாளர் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் புதிய பாடல் ‘ஹர் கர் திரங்கா’ வைரலானது
‘ஹர் கர் திரங்கா’ என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்தி பாடல் சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடிய இந்தப் பாடலை, பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ள ராக்ஸ்டார் டிஎஸ்பி என்று அன்புடன் அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசிற்காக கைலாஷ் பிக்சர்ஸ் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது.
“உலகெங்கிலும் நடைபெறும் எனது அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய இந்தியக் கொடியுடன் மேடையில் தோன்றி தேசபக்தி பாடல் ஒன்றை பாடுவேன். நம் தேசத்தின் மீது என் அன்பை வெளிப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்துள்ளது.நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
எல்லா வயதினரையும், குறிப்பாக இளைஞர்களை உற்சாகப்படுத்துவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ள தேசபக்தி ததும்பும் இப்பாடலின் மூலம் தான் உண்மையிலேயே ஒரு இசை மேஸ்ட்ரோ என்பதை டிஎஸ்பி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.