அங்கீகாரம் – விமர்சனம்

அங்கீகாரம் – விமர்சனம் 

 

 இந்த படத்தில் நடித்த கே ஜே ஆர் கோட்டப்பாடி ராஜேஷ் உயிரை பணயம் வைத்து நடித்து அனைவரையும் பாராட்டையும் பெறுகிறார் அவருக்கு இந்த முயற்சி எடுத்ததற்காக முதலில் ஒரு வாழ்த்துக்கள்.

சென்னையில் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ளார் அத்லெட் வீரரான நாயகன் KJR. அவரின் அம்மா தூய்மைப் பணியாளர். தங்கை வழக்கறிஞர் ட்ரைனிங்கில் இருப்பவர். ஹீரோ KJR அத்லெட்டில் ஜெயித்தால் மட்டும் தன் குடும்பம் மீளும் என்ற நிலைமை. ஆனால் அதிகார மையமும், சாதிய அடக்குமுறையும் KJR-ஐ காமன்வெல்த்தில் கலந்துகொள்ள விடாமல் சூழ்ச்சி செய்கிறது..அந்த சூழ்ச்சிக்கு எதிராக நீதிமன்ற படியேறுகிறார் ஹீரோ! அவருக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை

KJR சில காட்சிகளில் நன்றாக பெர்பாமன்ஸ் செய்துள்ளார். ஒருசில காட்சிகளில் சற்று மிகையான நடிப்பு வெளிப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம். இது அவருக்கு முதல்படம் என்பதால் அடுத்தடுத்து பெரிதாக ஜொலிப்பார் என நம்புவோம். விஜி வெங்கடேஷ், ரங்கராஜ பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்பட எல்லாக் கேரக்டர்களும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசை கதையிலுள்ள கனத்தை நமக்கு கடத்துகிறது. ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் தனது சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளார்.கிரவுண்ட் காட்சி முதல் க்ளைமாக்ஸ் காட்சிவரை கச்சிதமான விஷுவல்ஸை தந்துள்ளார்

ஒரு ஒடுக்கப்பட்ட பின்னணி கொண்ட இளைஞன் திறமை இருந்தும் தனக்கான அங்கீகாரத்தைப் பெற எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதை சமரசமின்றி சொல்லியுள்ளார் இயக்குநர் தென்பதியன். படத்தின் நீளத்தில் கொஞ்சம் கவனம் வைத்திருக்கலாம். லாஜிக் அற்ற கோர்ட் ட்ராமாவை இன்னும் ஷார்ப் செய்திருக்கலாம். இருப்பினும் இன்றைய சமூக எதார்த்தத்தைப் பேசிய வகையிலும், ஒரு மோட்டிவேசனை தந்த வகையிலும் இந்த அங்கீகாரம் முக்கியமான படம்!

இந்த அங்கீகாரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.

உழைப்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

Next Post

Recent News

error: Content is protected !!