• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘கண்ணகி’ – விமர்சனம் Rating 4/5

by Tamil2daynews
December 14, 2023
in விமர்சனம்
0
0
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘கண்ணகி’ – விமர்சனம்

 

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி,வித்யா பிரதீப், ஹாலின் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் கண்ணகி.யஹ்வந்த் கிஷோர் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் இப்படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம்ஜீ ஒளிப்பதிவும் படத்தொகுப்பை சரத்குமார் கையாண்டுள்ளார். கார்த்திக் நேத்தா இப்படத்திற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஸ்கை மூன் என்டர்டெயின்மெண்ட்  கீழ் கனேஷ், தனுஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.

கலை , நேத்ரா, நதி , கீதா ஆகிய நான்கு பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது கண்ணகி. வெவ்வேறு பொருளாதார சூழலைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தங்களது வாழ்க்கையில் வெவ்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். கட்டாயத்தின் பேரில் திருமணம். எதிர்பாராத கருத்தரிப்பு, விவாகரத்து, திருமணம் செய்துகொள்ளாததால் எதிர்கொள்ளும் அவதூறுகள் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இவர்கள் தங்களது விருப்பத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் சமூகத்துடன் போராடுகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை இருந்தாலும் இந்த நான்கு பெண்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமையை இயக்குனர் ஒரு சஸ்பென்சாக வைத்திருக்கிறார் படத்தில்.

முதலில் பெண்கள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடும் இது மாதிரியான கதையை கையில் எடுத்த இயக்குனருக்கு ஒரு வாழ்த்துக்கள்.

அடுத்தபடியாக இந்தப் படத்தை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும் மன ரீதியாக சொல்லப்போனால் இப்படத்தை தயாரித்திருக்கும் நிறுவனத்திற்கு பெரிய சபாஷ் சொல்லலாம்.

நான்கு கதாபாத்திரங்களை மிகவும் யதார்த்தமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர். பல படங்களில் நடித்த அனுபவத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நாயகி அம்மு அபிராமி. தனது தந்தை இழப்பை தாங்க முடியாமல் அழும் காட்சியில் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அம்மு அபிராமி.

அப்பாவாக வரும் மயில்சாமி நம்மை விட்டு மறைந்தாலும் நம் மனதிற்குள் நிற்கிறார் இந்த கதாபாத்திரமாக.அம்மாவாக வரும் மௌனிகா நிறைய வீடுகளில் இது மாதிரி அம்மாக்களை பார்ப்பது போன்று ஒரு பழைய நினைவுகள் நம் மனதிற்கு வருகிறது.

வாழ்க்கை யாருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வேண்டா வெறுப்பாக இருக்கும் நிலையில், ஒரு கை, துணையாக வரும்போது அதுவும் நம்மை விட்டுச் சென்றால்… அந்த மனநிலையை நன்றாகவே உணர்ந்து உள்வாங்கி நடித்திருக்கிறார் நாயகி வித்யா பிரதீப்.

ஒரு திமிரான, தெனவட்டான எவருக்கும் அடங்காத பெண்ணாக நடித்து கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஷாலின்.

பல விதமான சோகங்களை மனதிற்குள் தாங்கிக் கொண்டும் 4 மாத சிசுவை வயிற்றில் ஏந்திக் கொண்டும் ஒரு இறுக்கமான மனநிலையில் நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன் அக்கதாபாத்திரமாகவே கண்களை விட்டு அகலாமல் நடித்துச் சென்றிருக்கிறார்.

பல மலையாள படங்களில் இசை அமைத்திருக்கும் சான் ரகுமானின் இசை மனதை வருடுகிறது. அதிலும் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள காட்சிகளில் மழை வரும் போது இவரது இசையும் வருகிறது நம் காதில்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம் அதிலும்  கீர்த்தி பாண்டியன் வரும்  மருத்துவமனை காட்சிகளில் லைட்டிங் அபாரம்.

படம் முழுவதும் வரும் நான்கு பெண்களையும் எப்படி இணைத்து படத்தை முடிப்பார் இயக்குனர் என்ற கேள்வி நம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்க படமும் இறுதிக்காட்சியை எட்ட நம் இருக்கையை விட்டு எழுந்து இறுதிக் காட்சியை பார்த்தவுடன் கை தட்ட தான் தோன்றுகிறது அவ்வளவு அழகாக இணைத்து இருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமே படத்தின் வசனங்கள் தான்.

பொதுவாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால் ஆண்கள் அதிகமாக கைதட்டுவதை பார்க்கலாம் இந்த டிசம்பர் 15 முதல் பெண்கள் எழுந்து நின்று கைதட்டுவார்கள் இத்திரைப்படத்திற்கு.

இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் இந்த படத்தை இயக்கிய  இயக்குனருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த ‘கண்ணகி’  அனைவரையும் கவரும்.

குறிப்பு :  பெண்களே இப்படத்தை காணதவறாதீர்கள்…

Rating; 4/5

 

                         விமர்சகர்
                              சரண்
Tags: Ammu Abhiramikannagi moviekannagi movie reviewkannagi tamil movieKeerthi PandianMayilsaamymounigavidya pradeep
Previous Post

தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள்.

Next Post

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி”பாடல் வெளியாகியுள்ளது

Next Post

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி”பாடல் வெளியாகியுள்ளது

Popular News

  • தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!

    தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

    0 shares
    Share 0 Tweet 0
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.