• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பிஹைண்ட் ‘

by Tamil2daynews
April 22, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பிஹைண்ட் ‘

 

ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக ‘பிஹைண்ட் ‘என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில்  தயாரித்துள்ளார்.இதில் பாசமுள்ள உணர்ச்சிகரமான தாயாக சோனியா அகர்வால் நடித்துள்ளார் . லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர்.
சோனியா அகர்வாலின் கணவராக  கதையின் கதாநாயகனாக ஜினு இ தாமஸ் நடித்துள்ளார்.அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார்.

ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற கண்ணுக்குத் தெரியாத அந்த  ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.

இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். அதில் உணர்ச்சிகரமான காட்சிகளும் உள்ளன.மூச்சைப் பிடித்துக் கொள் பின்னால் பதுங்கி இரு என்கிற பரபரப்போடு இந்தப் படம் இருக்கும்.இந்தப் படத்தை பாவக்குட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ஷிஜா ஜினு தயாரித்துள்ளார்

இதற்கான படப்பிடிப்பு கேரளாவில் திருச்சூர், வாகமன் ,குட்டிக்கானம், மூணார் , ஏலப்பாறா போன்ற இடங்களில் 40 நாட்கள் நடைபெற்றுள்ளன.இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில்உருவாகிறது.

அமன் ரஃபி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி. ஷமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். வைசாக் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை முரளி அப்பாதத்,ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன்.

சுமார் இரண்டு மணி நேரம் கால அளவு கொண்ட இந்தப் படத்தை  பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. இந்தப் படத்தின் முன்னோட்டமாக ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.அதனைத் தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும்.

 

Previous Post

தமன்குமார் நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு !!

Next Post

‘டியர்’ படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு

Next Post

'டியர்' படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • FARISHTON – First song by Khatija Rahman (daughter of AR Rahman) Music composed by AR Rahman

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.