• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி-சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பார்ட் 2′ படத்தின் கர்நாடக திரையரங்க உரிமையை ஏவி மீடியா வாங்கியுள்ளது!

by Tamil2daynews
July 23, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய்சேதுபதி-சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பார்ட் 2′ படத்தின் கர்நாடக திரையரங்க உரிமையை ஏவி மீடியா வாங்கியுள்ளது!

 

தமிழ்த் திரைப்படங்கள் எப்போதுமே மொழி போன்ற தடைகளைக் கடந்து கன்னட பார்வையாளர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வரும் உணர்வுப்பூர்வமான கதைக்களங்கள் பிறமொழி பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியான ஒரு படமாக வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வெளியான ‘விடுதலை 1’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஏவி மீடியா, விஜய்சேதுபதி மற்றும் சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் கர்நாடக திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏவி மீடியாவின் வெங்கடேசன் இதுபற்றி பேசும்போது, “திரைப்படங்களை  வாங்கி, வெளியிடுவதை நாங்கள் துல்லியமாகவும் கச்சிதமாகவும் வெற்றிகரமாகவும் செய்து வருகிறோம். ‘விடுதலை 2’ போன்ற ஒரு திரைப்படம் எங்களை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது. இந்தப் படத்தைப் பற்றி நாம் கேள்விப்படுவதை விட பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பார்வையாளர்களுக்கு உள்ளது. ஒரு விநியோக நிறுவனமாக, இந்தப் படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்” என்கிறார்.‘விடுதலை 1’ படத்திற்குப் பிறகு, நடிகர்கள் – விஜய்சேதுபதி மற்றும் சூரி இருவரும் ‘மகாராஜா’ மற்றும் ‘கருடன்’ என அவர்களின் சமீபத்திய படங்களின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த இரண்டு படங்களும் கர்நாடகாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ரஜினியின் ‘ஜெயிலர்’, ‘விடுதலை ‘1, ‘சர்தார்’, ‘மகாராஜா’, ‘கருடன்’, ‘கல்கி’ மற்றும் தனுஷின் ‘ராயன்’ ஆகிய படங்களை வெளியிட்ட ஏவி மீடியா ‘விடுதலை 2’ படமும் தங்களுக்கு லாபகரமான படமாக இருக்கும் என்று நம்புகிறது.

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘விடுதலை 2’ படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் அற்புதமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இரண்டாம் பாகத்தில் நடிகர்கள் மஞ்சு வாரியர் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு:
இயக்குநர் – வெற்றிமாறன்,
இசை – இளையராஜா,
ஒளிபதிவு- ஆர். வேல்ராஜ் ,
கலை இயக்குநர் – ஜாக்கி,
எடிட்டர் – ராமர்,
ஆடை வடிவமைப்பாளர் – உத்ரா மேனன்,
ஸ்டண்ட் – பீட்டர் ஹெய்ன் & ஸ்டண்ட் சிவா,
ஒலி வடிவமைப்பு – டி. உதய குமார்,
விஎஃப்எக்ஸ் – ஆர். ஹரிஹரசுதன்
நிர்வாகத் தயாரிப்பாளர் – ஜி. மகேஷ்,
இணைத்தயாரிப்பாளர் – வி.மணிகண்டன்,
தயாரிப்பாளர் – எல்ரெட் குமார்

Previous Post

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்

Next Post

தனது பிறந்தநாளை முதியோர் இல்ல உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் சாக்ஷி அகர்வால்!

Next Post

தனது பிறந்தநாளை முதியோர் இல்ல உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் சாக்ஷி அகர்வால்!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.