• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மெஸன்ஜர் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
October 30, 2025
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மெஸன்ஜர் – விமர்சனம் 

கன்னிமாடம் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக், அடுத்து நடித்துள்ள படம், ‘மெஸன்ஜர்’. பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி.

ஐடி கம்பெனியில் பணியாற்றும் ஸ்ரீராம் கார்த்திக், தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரது முகநூல் மெஸன்ஜரில் ஒரு பெண் தகவல் அனுப்பி அதை தடுக்கிறார். அவளுக்கு எப்படி, தான் தற்கொலை செய்ய போவது தெரியும்? அந்தப் பெண் யார்? என்பது கதை. ஃபேன்டஸி காதல் கதையாக இது உருவாகியுள்ளது. பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அபு பக்கர் இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான சிந்தனை மற்றும் விபரீதமான காட்சியமைப்புகள் இருந்தாலும், தனது நடிப்பு மூலம் அனைத்தையும் மிக சாமர்த்தியமாக சமாளித்து, நாயகனாக தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்திருக்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சம் என்று சொல்பவர்கள், ஸ்ரீராம் கார்த்திக் போன்ற நடிகர்களை பயன்படுத்தி, அந்த பஞ்சத்தை போக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, வழக்கம் போல் கவர்ச்சியில் தாராளம் காட்டவில்லை என்றாலும், அந்த குறையை போக்க லிப் லாக் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் மனிஷா தன் வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமா, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற முகத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன், அழகு மற்றும் கவர்ச்சியில் கவனம் ஈர்க்கிறார். திரைக்கதையில் பெரிய திருப்பமாக இருப்பார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, பாதியிலேயே படத்தில் இருந்து விலகி ஏமாற்றம் அளிக்கிறார்.

ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.

இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரளித்திருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் தனி கவனம் பெறவில்லை என்றாலும் மெதுவாக செல்லும் திரைக்கதை மற்றும் காட்சிகளை ரசிக்க வைக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பால கணேசன்.ஆர், எளிமையான கிராமத்து லொக்கேஷன்களை பல்வேறு கோணங்களில் காட்சியாக்கி ரசிக்க வைத்திருப்பதோடு, நாயகன் மற்றும் நாயகிகளையும் பளிச்சென்று படம்பிடித்து அழகாக காண்பித்திருக்கிறார்.

திகில் கதையை இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்லும் இயக்குநரின் முயற்சியை சிறப்பாக உள்வாங்கி பணியாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரசாந்த்.ஆர்-ன் பணியும் பாராட்டும்படி உள்ளது.

பார்க்காத காதல், ஒருவர் பார்த்து மற்றொருவர் பார்க்காத காதல் என்று தமிழ் சினிமாவில் பல காதல் கதைகள் வந்திருக்கிறது. ஆனால், இயக்குநர் ரமேஷ் இளங்கமணி சொல்லியிருக்கும் இந்த காதல், இதுவரை யாரும் சிந்திக்காத ஒன்று. திகில் படமாக தொடங்கும் கதை, பிறகு காதல் கதையாக விரிவடையும் போது, பார்வையாளர்களை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியடைய செய்கிறது.

நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், அதை திரை மொழியில் கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி, கதை சொல்லல், திரைக்கதையை கையாண்டது மற்றும் காட்சிகளை படமாக்கியது ஆகியவற்றின் மூலம் ஒரு தரமான படத்தை வித்தியாசமான கதைக்கருவோடு கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த மெஸன்ஜர் காதல் கண்மூடித்தனமானது என்பதை தாண்டி காதலுக்கு கண்ணே இல்லை என்பதை உணர்த்தும் படம்.
Previous Post

“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

Next Post

புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’!

Next Post

புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’!

Popular News

  • பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.