• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

by Tamil2daynews
September 1, 2022
in சினிமா செய்திகள்
0
டைரி – விமர்சனம்
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்
பொதுவாக பா. இரஞ்சித் படங்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவது தான் வழக்கம்.

 ஆனால் அதை  விட்டு காதலில் அரசியலையும், அரசியலில் காதலையும் சொல்லி புதுமைப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பா. இரஞ்சித்.

சென்னை: நாடகக் காதல், 200 ரூபாய் டிசர்ட் போட்டுட்டு போனால் பொண்ணுங்க லவ் பண்ணிடுவாங்களான்னு தொடங்குகிற இடத்தில் இருந்து காதல் அரசியலை கச்சிதமாக பேசியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.

துஷாரா விஜயனின் ரெனே கதாபாத்திரம் இவ்ளோ போல்டாக எழுதப்பட்டு இருப்பது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஆனால், Rugged பாய்ஸ் தான் வேணும் என அடம் பிடிக்கும் 2கே கிட்ஸ் பெண்களுக்கு இதெல்லாம் செட்டாகுமா? என்கிற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை. நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..
Natchathiram Nagargiradhu movie review: Pa Ranjith's most personal, indulgent, and bold work - NewsTimes.com.ng

சினிமாவில் சாதிக்க நினைக்கும் கலையரசன் பாண்டிச்சேரியில் ஒரு கூத்துப் பட்டறைக்கு செல்கிறார். அங்கே காதல் பிரேக்கப் செய்த துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் இணைந்து ஒரு காதல் டிராமாவை போட திட்டமிடுகின்றனர். அவர்கள் எடுத்துக் கொள்ள நினைக்கும் டாப்பிக்கை வைத்தே காதல் என்கிற அற்புத உணர்வை வைத்து சமூகம் செய்யும் அரசியலை இயக்குநர் பா. ரஞ்சித் பேசியிருப்பது தான் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதை.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் தான் காதல் என இதுவரை தமிழ் சினிமா சொல்லி வந்த நிலையில், உலகளவில் LGBTயினர் அதிகரித்து வரும் சூழலில் அவர்களது காதலும் அவர்கள் சந்திக்கும் சமூக பிரச்சனையையும் அழகாக எடுத்து பேசியுள்ளது நட்சத்திரம் நகர்கிறது. காதலில் அரசியல் கலக்கக் கூடாது என்றும் ஜாதி, மதம், பணம் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் காதலுக்கு எதிரியாக அமையக் கூடாது என்றும் இரு மனங்கள் ஒன்றானால் அவர்களை அவர்கள் விருப்பப்படி வாழ வைக்கும் என்பதை டிராமா டிஸ்கஷனாகவே சொல்லியிருக்கிறது இந்த படம்.
Simbu launches the ecstatic trailer of Pa Ranjith's 'Natchathiram Nagargirathu'! - Tamil News - IndiaGlitz.com

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை என பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் கலையரசன் இந்த படத்தில் பொது ஜனமாக இருந்து கேட்கும் கேள்விகளும் அதற்கு கிடைக்கும் விடைகளும் ரசிக்க வைக்கிறது. எதிர்ப்பு அரசியல் மற்றும் ஒதுக்கும் அரசியல் சரியானது இல்லை என்றும் சமநிலையை அதை உணராதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என பா. ரஞ்சித் பேசியுள்ள தத்துவ அரசியல் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

படத்திற்கு மிகப்பெரிய பலமே துஷாரா விஜயனின் “ரெனே” கதாபாத்திரம் தான் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி சுமக்கிறது. அதன் வழியாகவே ஒவ்வொரு கருத்தையும் இயக்குநர் சமூகத்திற்கு சொல்ல முயற்சி செய்கிறார். காளிதாஸ் ஜெயராம் இன்றைய இளைஞர்களின் மனசாட்சியாக நடித்திருப்பது பிரமாதம். ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரின் காட்சிகளும் அதற்கு தகுந்தவாறு கலை இயக்குநர் அமைத்துள்ள செட் வொர்க்கும் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை கவனத்தை ஈர்க்கிறது. தமிழ் சினிமாவில் பெரிதும் பேசத் தயங்கும் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதல், திருநங்கைகளின் காதல் உள்ளிட்ட அனைத்தையும் ஜாதி, மத அரசியல் கலந்து படம் பேசியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.
Simbu launches the ecstatic trailer of Pa Ranjith's 'Natchathiram Nagargirathu'! - Tamil News - IndiaGlitz.com

அதே சமயத்தில் கொஞ்சம் பலவீனமும் படத்தில் உண்டு.

ஓவர் பிரச்சார நெடியாக படம் முதல் பாதியை போல இரண்டாம் பாதியிலும் பயணிப்பது ரசிகர்களை தியேட்டரில் சீட்டை விட்டு எழுந்து செல்ல வைக்கிறது. டென்மாவின் இசை இன்னமும் படத்திற்கு கூடுதல் வலுவை சேர்த்திருக்கலாமோ என்கிற உணர்வை தூண்டுகிறது. படத்தின் நீளம் மற்றும் காட்சிகளாக நகராமல் வசனத்திலேயே பல விஷயத்தை நகர்த்துவதால் இந்த நட்சத்திரம் சற்று மெதுவாகவே நகர்கிறது!

எது எப்படியோ சாதிய பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கும் பா . இரஞ்சித் தனது பாணியை மாற்றிக் கொண்டு இளைஞர்களுக்காக எடுத்திருக்கும் இப்படம் அனைவரின்  மனதையும் திருப்திப்படுத்தும் படமாகவே இருக்கின்றது இந்த நட்சத்திரம் நகர்கிறது.
Previous Post

மீண்டும் இணையும் பிரபல வெற்றிப்பட நிறுவனங்கள்..!

Next Post

பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

Next Post
டைரி – விமர்சனம்

பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! - மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

Popular News

  • டைரி – விமர்சனம்

    பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது ” தடை அதை உடை ” படத்தின் இயக்குனர் அறிவழகன் முருகேசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ படக் கொண்டாட்டம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.