• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மகிழ்ச்சி வெற்றிப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா”

by Tamil2daynews
October 28, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மகிழ்ச்சி வெற்றிப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா”

 

கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றித் திரைப்படங்களுக்கு பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படைப்பிற்கு “மாவீரா”என பெயரிட்டதோடு படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். புகழ்பெற்ற “தலைமுறைகள்” நாவலை “மகிழ்ச்சி” என திரைப்படமாகவும்,  “சந்தனக்காடு” வீரப்பனின் வரலாற்றை நெடுந்தொடராகவும்  உண்மைச்சம்பவங்களை மட்டுமே மையப்படுத்தி படைப்புகள் செய்த  வ.கௌதமன் “மாவீரா”வில் முதன் முதலாக மண்ணையும், பெண்ணையும் மானத்தையும் காத்து வாழ்ந்த ஒரு முந்திரிக்கட்டு  மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்பாக்குகிறார் .

“எதிரியை கொல்லணும்   என்று நினைப்பதை  விட அவன் மனதை வெல்லணும்” என்கிற இலக்கோடு இப்படைப்பிருக்கும் என நம்பிக்கை தரும் இயக்குனர் அதே நேரத்தில் கேட்பார் எவருமில்லை என்கிற தீய எண்ணத்தோடு எவர் வரினும் “அத்து மீறினால் யுத்தம்” என்கிற பிரகடனத்தையும் “மாவீரா” பேசும் என்கிறார்.

பரபரப்பான சம்பவங்களோடு ஆக்ஷன் கலந்து  அதிரடியாக உருவாகும் மாவீராவிற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, சண்டை பயிற்சி ‘ஸ்டண்ட்’ சில்வா, நடனம் தினேஷ், மக்கள் தொடர்பு நிகில் முருகன்  என முன்னணி தொழிநுட்பக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

வி.கே புரடக்ஷன் குழுமம்  முதன் முறையாக தயாரிக்கும் இப்படைப்பில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகையர்கள் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.

Previous Post

நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்” ; 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்

Next Post

தளபதி விஜயை பின் தொடரும் 40 லட்சம் பார்வையாளர்கள்

Next Post

தளபதி விஜயை பின் தொடரும் 40 லட்சம் பார்வையாளர்கள்

Popular News

  • ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.