• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ‘சிங்கப்பூர் சலூன்’

by Tamil2daynews
November 12, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ‘சிங்கப்பூர் சலூன்’
நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.
இந்த வெற்றிகரமான கூட்டணியில் புதிய இயக்குநர் இணைந்திருப்பது சுவாரஸ்யம் தரக்கூடிய ஒன்று. வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை/ உதவி இயக்குநர்களுடன் கூட்டணி சேர்வார். இந்த முறை ஆர்.ஜே. பாலாஜி- டாக்டர் ஐசரி கே கணேஷ் இணை, இயக்குநர் கோகுலுடன் (ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா புகழ் இயக்குநர்) இணைந்திருக்கிறது. நிச்சயமாக இந்தக் கூட்டணி பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான ஒரு கதையைத் தரும்.
ஆர்.ஜே. பாலாஜி இதற்கு முன்பு தான் நடித்திருந்த படங்களின் வெற்றி மூலம் வர்த்தக வட்டாரத்தில் நல்லதொரு வசூல் செய்து வியாபாரம் கொடுத்திருக்கிறார். அதேபோல, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலும் அடுத்தடுத்து கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறது. இப்போது, சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு இயக்குநரான கோகுலுடன் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருப்பது பார்வையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், முக்கிய கதாபாத்திரத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கக் கூடிய மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரக்கூடிய ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2023 கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.
Previous Post

பரோல் – விமர்சனம்

Next Post

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்

Next Post

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்

Popular News

  • ரூம்பாய் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.