ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பரோல் – விமர்சனம்

by Tamil2daynews
November 12, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பரோல் – விமர்சனம்

 

இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரோல். இந்த படத்தில் லிங்கா, ஆர் எஸ் கார்த்திக், கல்பிகா, மோனிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை Tripr Entertainment நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ராஜ்குமார் அமல் இசை அமைத்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் பரோல் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
Parole Tamil Movie Preview cinema review stills gallery trailer video clips showtimes - IndiaGlitz.com
படத்தில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கா சிறு வயதிலேயே தவறு செய்து விட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அங்கு சிறையில் கரிகாலனிடம் சிலர் தகாத முறைகளில் நடந்து கொள்கிறார். இதனால் கரிகாலன் கோபம் அடைகிறார். பின் அவர்களை கொடூரமான முறையில் கரிகாலன் கொலை செய்கிறார். சிறு வயதிலேயே சிறைக்கு சென்ற கரிகாலன் ஆறு ஆண்டுகள் கழித்து தான் வெளியே வருகிறார்.
கரிகாலனை வெளியில் எடுக்க அவருடைய தாய் தான் கஷ்டப்படுகிறார். கரிகாலனின் தம்பி கோவலன் கதாபாத்திரத்தில் ஆர் எஸ் கார்த்திக் நடித்திருக்கிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே கரிகாலன் மீது மட்டும் தான் தன்னுடைய அன்பு செலுத்துகிறார் என்று அண்ணன் மீது வெறுப்பு செலுத்துகிறார். மேலும், கரிகாலன் தன் தாய் எவ்வளவு சொல்லியும் கொலை செய்வதை நிறுத்துவதே இல்லை. தவறான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறார்.
அப்படி அவர் தொடர்ந்து கொலை செய்து வரும் நிலையில் கரிகாலன் ஒருமுறை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை உடன் சிறை செல்கிறார். எப்படியாவது தன் மகனை சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்று தாய் போராடுகிறார். பின் இந்த போராட்டத்தில் அவர் திடீரென இறந்து போகிறார். தனது அண்ணன் மீது இருக்கும் வெறுப்பினால் தன்னுடைய தாய்க்கு இறுதி சடங்கை கூட அண்ணனை செய்ய விடக்கூடாது தானே செய்துவிடலாம் என்று கோவலன் நினைக்கிறார்.
Parole Movie Review: Unconventional narration and layered plot make Parole an interesting watch
ஆனால், கரிகாலனின் நண்பர்கள் இதில் தலையிட்டு கரிகாலனை வெளிய எடுக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இந்த முயற்சியில் கரிகாலனுக்கு பரோல் கிடைத்ததா? அதற்குள் சிறையில் இருந்த கரிகாலன் என்ன செய்தார்? அண்ணன் மீது இருக்கும் கோபத்தினால் கோவலன் எடுத்த முடிவு என்ன? தாய் உடைய இறுதி சடங்கை செய்தது யார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் கார்த்திக் – லிங்கா இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
தாய் கதாபாத்திரத்தில் நடிகை ஜானகி சுரேஷ் படத்தை தாங்கி நிற்கிறார் என்று சொல்லலாம். இவர்களை தொடர்ந்து படத்தின் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் கையாண்ட கதைக்களம் புதுமை என்றாலும் கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை லாகில்லாமல் நகர்கிறது. இதற்காகவே இயக்குனருக்கு தனி பாராட்டு செலுத்தலாம். மொத்தத்தில் ஒரு ஓகே ரக படமாக ‘பரோல்’ இருக்கிறது.
         விமர்சகர் – சரண்
        9994667873
Previous Post

மிரள் – விமர்சனம்

Next Post

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ‘சிங்கப்பூர் சலூன்’

Next Post

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'சிங்கப்பூர் சலூன்'

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • விகடன் மீது புகார் அளித்துள்ள தீதும் நன்றும் படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் – சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆரி நடிக்கும் ”எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”

    0 shares
    Share 0 Tweet 0
  • ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய ” பேய காணோம்” படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

March 23, 2023

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

March 23, 2023

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா !

March 23, 2023

தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

March 23, 2023

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

March 23, 2023

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!