கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி”
டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்
பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
பருத்தி படத்தை படக்குழு மிகச்சிறப்பாக எடுத்துள்ளனர். படத்தில் நடித்த சோனியா அகர்வால் முதலாக அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் குகன் சக்கரவர்த்தி பேசியதாவது..,பருத்தி படம் எடுக்கும் முன்பிருந்தே இயக்குநரைத் தெரியும், அவர் நல்ல நடிகர் நன்றாக பேசுவார், அவர் நல்ல இயக்குநர். பருத்தி படத்தின் மிகப்பெரிய தூண் சோனியா அகர்வால், அவருக்கு இப்படம் மூலம் பெரிய வெற்றி காத்திருக்கிறது. இப்படம் அனைவருக்கும் வெற்றியைத் தர என் வாழ்த்துகள்.
சின்ன முயற்சிகளே பெரிய மரமாகும். குரு சாரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். நன்றாக பேசுவார். அவர் நல்ல நடிகர் எனக்கு கதை சொல்லியிருக்கிறார். அவர் இன்று இருக்கும் நல்ல இயக்குநர்களின் லிஸ்டில் இடம் பிடிப்பார். அவருக்கு மிகச்சிறப்பான இடம் கிடைக்கும். சோனியா மேடம் இன்றும் பார்க்க அப்படியே இருக்கிறார். இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் அனைவருக்கும் நன்றி.
நான் இயக்குநர் குழுவில் இருப்பவன் தான். நண்பனோட பயணத்தில் நானும் இருக்க வேண்டுமென நான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறேன். இது மாதிரி நல்ல படைப்புகளை SGR Film Factory மூலம் தொடர்ந்து வெளியிடுவோம். குருவும் நானும் நெருங்கிய நண்பர்கள், இரவு 2 மணிக்கு போன் செய்து என்னிடம் கதை சொல்வார், ரொம்ப ஜாலியாக எல்லோருடனும் பழகுவார். சினிமாவில் அவருக்கும் இன்னும் பெரிய இடம் உள்ளது. கோதண்டம் சார் குருவை முழுதாக நம்பினார். வரும் 25 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். சோனியா அகர்வால் மேடம் ரசிகன் நான். அவர் சூப்பராக நடித்துள்ளார். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் திலீஷ் பேசியதாவது..,எல்லோருக்கும் வணக்கம். எனக்கு வாய்ப்பு தந்த அப்பாவுக்கு நன்றி. எல்லோரும் ஒரு குடும்பமாக தான் வேலை பார்த்தோம். பருத்தி மிக அழகான படமாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
பருத்தி என்றால் பூ. நண்பர் குருவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனை தரட்டும், சோனியா மேடம் இப்படத்தின் மையமாக இருக்கிறார். அவர் விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. என் படத்தில் யோகிபாபு நடித்து விட்டு விழாவிற்கு வரவில்லை, அதைப்பற்றி பேசியது பிர்ச்சனை ஆனது. இதை தயாரிப்பாளர் சங்கம் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இசையமைப்பாளர் வரவில்லை என்பது வருத்தம், அவர் சொந்த படத்திற்கு வரமால் இருக்கக் கூடாது. படத்தின் பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.
சிறு படங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு தர வேண்டும். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர் இமயம் பாரதிராஜா அவருடைய உதவியாளர் குரு இயக்கியுள்ள படைப்பு பருத்தி. டிரெய்லர் பார்க்கும் போதே அதில் உள்ள எதார்த்தம் தெரிகிறது. சோனியா மேடம் நடிப்பு அருமையாக உள்ளது. குரு இந்தப்படத்தை எடுத்து இங்கு கொண்டு வர அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் படம் எடுக்கவில்லை என்றால் தமிழ் சினிமா அழிந்துவிடும். அந்த தயாரிப்பாளர்களின் முயற்சியால் தான் இந்த தமிழ் சினிமா இயங்கி வருகிறது. திரையரங்கு வைப்பது தான் இன்று சட்டமாக உள்ளது. சின்ன படத்தை வெளியிடுவதில் அத்தனை பிரச்சனை உள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள் இயக்குநர்களிடையே ஒரு கட்டுக்கோப்பு இல்லை. இதை தட்டிக்கேட்க ஆளில்லை. இது மாற வேண்டும். வெறும் பத்து பேர் வாழ சினிமா இயங்கி வருகிறது. படம் ரைட்ஸ் விற்கவில்லை ஆனால் ஆன்லைனில் வந்துவிடுகிறது. கோடிகளை போடும் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு வேண்டும். விரைவில் மாற்றம் வரும். இப்படம் ஜெயிக்க வாழ்த்துகள் அனைவருக்கும் நன்றி.
நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது..,பருத்தி எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் இங்கு இருந்து யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன் ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார். அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் K பாரதி அவர்களை வைத்து, வளையல் என்ற திரைப்படத்தை இயக்கிய குரு A அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.கிராமத்து வாழ்வியலையும் உணர்வு போராட்டத்தையும், இத்திரைப்படத்தில் கொண்டுவந்துள்ளார் . சமூக சிக்கல்களில் சிக்கி தவித்து பால்ய பருவத்தை கடக்கும் சிறார்களின் மனநிலையை யாதார்த்தத்துடனும் மிகவும் உணர்வு பூர்வமாக கிராமத்திலிருந்து வாசம் மாறாமல் இயக்குநர் எடுத்து வந்திருக்கிறார்.
இப்படத்திற்கு ரஞ்சித் வாசுதேவன் இசையமைத்துள்ளார். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.









