• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கொம்பு சீவி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
December 21, 2025
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கொம்பு சீவி – விமர்சனம் 

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தும் அவருக்கு ஒரு சரியான ஒரு வெற்றிப் படம் அமையவில்லை. கடைசியாக வெளியான படைத்தலைவன் திரைப்படமும் பேசப்படவில்லை.

இந்நிலையில்தான் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து சண்முக பாண்டியன் நடித்திருக்கும் படம் கொம்பு சீவி.

“கொம்பு சீவி” திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கதையின் முதல் பாதி வேகமான சண்டை காட்சிகள் மற்றும் த்ரில்லர் காட்சி கலவையுடன் நகர்கிறது. இத்தகைய அசத்தல் காட்சிகள், முதல் பாதியை விரும்பியவர்களுக்கு முக்கியமான அனுபவமாக அமைகிறது.

இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகள், குடும்ப உரையாடல்கள் மற்றும் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், படம் சுவாரஸ்யமாக காணப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

“கிளைமாக்ஸில் வரும் திருப்பம் ரசிக்க வைக்கிறது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய சிறந்த படம். காமெடி காட்சிகள் படத்தை மேலும் உயிரோட்டமாக மாற்றியுள்ளது. அதுவே படத்திற்கு பலம்.

1970-களில் வைகை அணை கட்டுவதற்காக, தேனி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களைக் காலி செய்து, அவற்றைக் கையகப்படுத்துகிறது அரசு. அதனால், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

வைகை அணைக்கு அருகிலிருக்கும் பகுதியில் வசிக்கிறார் ரொக்கப்புலி (சரத்குமார்). அந்த ஊரின் காட்ஃபாதர்! ஒரு கட்டத்தில், தனிமையில் நிற்கும் கொம்புசீவி பாண்டிக்கு (சண்முகப் பாண்டியன்) ரொக்கப்புலி உதவி செய்கிறார். பிறகு ரொக்கப்புலியுடனேயே வந்து இணைந்துவிடுகிறார் பாண்டி.

அதனையடுத்து இருவரும் இணைந்து பல கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பணத்தோடு, காவல் அதிகாரிகளுடனான பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும் என்ன செய்தது என்பதுதான் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் கதை.

கோபம், கெத்தான உடல்மொழி என மதுரை சம்பவக்காரராக நிமிர்ந்து நிற்கிறார் ‘கதையின் நாயகன்’ சரத்குமார். அதோடு ஆக்ஷன் களத்தில் துள்ளல் குறையாத புத்துணர்ச்சி, சீரியஸ் முகபாவனையை வைத்துக் கொண்டு செய்யும் நையாண்டிகள் எனக் கலகலப்புக்கும் கரம் தந்திருக்கிறார்! ஆனால், வெள்ளை தாடி, மீசை ஒப்பனை மட்டும் செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கின்றன.
எதிரிகளை அடித்துப் பறக்கவிட்டு வெற்றி நடைபோடும் ஆக்ஷன் அவதாரத்திலும், கோப ரியாக்ஷன்களை வெளிப்படுத்தும் இடங்களில் மட்டும் கச்சிதம் காட்டி கைதட்டல்களை வாங்கிக் கொள்கிறார் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த்.

இருப்பினும், ஓரிரு இடங்களில் எட்டிப் பார்க்கும் மிகை நடிப்பைச் சீவியிருக்கலாம்! அதுபோல, மதுரை வட்டார வழக்கு உச்சரிப்பில் முழுமையைக் கடைப்பிடிக்காதது ஏனோ?!

காவல் அதிகாரியாக கதாபாத்திரத்திற்குத் தேர்ந்த நடிப்பைக் கொடுக்காமல் தட்டுத் தடுமாறி பாஸ் மார்க் வாங்குகிறார் நாயகி தர்ணிகா. டெம்ப்ளேட் காமெடி கதாபாத்திரங்களுக்கான விஷயங்கள் அடங்கியிருந்தாலும் அதனைச் சுவாரஸ்யமாக்கிக் கலகல எபிசோடுக்கு ஸ்டீயரிங்கை திருப்பியிருக்கிறார் கல்கி ராஜா..

இவர்களுடன், ஓரிரு காமெடிகளை மட்டும் செய்துவிட்டுப் போகும் காளி வெங்கட், மரியம் ஜார்ஜ், தருண் கோபி போன்றோருக்கு நடிப்பில் பெரிய வேலையில்லை.

மலைகளையும் வெக்கை படிந்த நிலங்களையும் படம்பிடித்த விதம், வைகை அணையை ஒட்டிய பகுதிகளைக் காட்சிப்படுத்தக் கையாண்டிருக்கும் ஒளியமைப்பு என ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்திற்குக் கூர்மை தீட்டியிருக்கிறார். ஆனால், பீரியட் காலகட்டத்திற்கான கலை இயக்கப் பணிகளில் எதார்த்தம் இல்லாதது மைனஸ்!

அதுவே, கதை எந்தக் காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்கிற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தில் கருணை காட்டத்தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்களில் உயிர் இல்லை! பின்னணி இசையில் இடைவேளை காட்சியில் மட்டும் ஃபயர் மோடுக்குச் சென்றிருக்கும் யுவன், மற்ற இடங்களில் தன் மேஜிக்கை நிகழ்த்தாதது ஏமாற்றமே!
முதற்பாதியில் ஆங்காங்கே வரும் சில காமெடிகள் மட்டும் படத்தின் சிரிப்பின் வால்யூமைக் கொஞ்சம் கூட்டுகின்றன. குறிப்பாக, லாரி சீன் எபிசோடு நல்ல ‘ஹா ஹா’ மெட்டீரியல் பாஸ்! ஆனால், பெரும்பாலான இடங்களில் காலாவதியான காமெடி வசனங்கள் நம் பொறுமைக்கும் சவால் விடுகின்றன.

அதோடு, ‘நாங்களும் பெரிய சம்பவக்காரய்ங்கதான்’ எனக் காதல் போர்ஷனும் திரைக்கதையில் தொற்றிக் கொண்டு நம்மைச் சோதிக்கின்றன.

இவன் சங்கர் ராஜாவின் இசையா என்று பல இடங்களில் கேட்க வைக்கிறது அந்த அளவுக்கு பின்னணி இசையில் இரைச்சல் அதிகம்.

வரலாற்று கதைகளை எப்பொழுது எடுத்தாலும் காமெடி காட்சிகள் தவிர்த்து எடுத்தால்  ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என்பது இயக்குனர் பொன்ராமிற்கு தெரியவில்லை.

சரத்குமார் அளவுக்கு சண்முக பாண்டியன் நடிப்பு இல்லை என்றாலும் ஒட்டுமொத்த படமும் பலவீனமான திரைக்கதையால் சற்று தோய்வடைந்து விடுகிறது.

படத்தின் தலைப்பில் இருக்கும் கூர்மை திரைக்கதையில் இருந்திருந்தால் நிச்சயமாக பண(வசூல்) கொம்புகளை சீவி இருக்கும் இந்த
 கொம்பு சீவி.
Previous Post

பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !!

Next Post

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில் ‘நாடியா’ (Nadia) வாக கலக்கும் கியாரா அத்வானி (Kiara Advani) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Next Post

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில் ‘நாடியா’ (Nadia) வாக கலக்கும் கியாரா அத்வானி (Kiara Advani) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.