• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!

by Tamil2daynews
February 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!

 

தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன்,  அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பலமுனைகளில் பல புதுமையான விளம்பரங்களைச் செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாகவே சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய அளவில், திரைப்பட விளம்பரத்திற்காக ட்ரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. வானில் மின்னும் எழுத்துகளாக ‘With Love’ தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒருசேர வெளிப்படுத்தியது.

இந்த தனித்துவமான நிகழ்வில், ‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த ட்ரோன் ஷோ வீடியோக்கள் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை  இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

 “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Previous Post

இராவணனை தேடிய சீதையின் காதல் சீயானே

Next Post

பரப்பரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகிறது சத்யராஜ்‍-மணிவண்ணனின் ‘அமைதிப்படை’

Next Post

பரப்பரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகிறது சத்யராஜ்‍-மணிவண்ணனின் 'அமைதிப்படை'

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.