• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்.

by Tamil2daynews
March 9, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்.

 

மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், முன்னணி படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும்  ‘கல்கி 2898 A.D’  படத்திலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட் ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.  சமூக ஊடகங்களின் வழியே, தயாரிப்பாளர்கள், சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து, முன்னணி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்துள்ளனர்.  ‘கல்கி 2898 A.D.’ படத்தில்  ‘பைரவா’ என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். ‘பைரவா’வை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, படக்குழுவினர் அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!.  படத்திலிருந்து வெளியான அற்புதமான அப்டேட், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ்  ரசிகர்கள் இணையம் முழுக்க இந்த செய்தியினைப் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Imageஇந்த செய்தியினை சமூக ஊடகங்களில் ‘கல்கி 2898 AD’  படத்திலிருந்து பிரபாஸின் ‘பைரவா’ படத்தைப் பகிர்ந்து, காசியின் எதிர்கால தெருக்களிலுருந்து, ‘கல்கி 2898 AD’ இன் பைரவா உங்களுக்காக என தெரிவித்துள்ளது படக்குழு.

#Prabhas #ki2898ADonMay9”

புகைப்படத்தின் ஒவ்வொரு சிறு அம்சமும் முழுக்க முழுக்க  மிரட்டலாக இருக்கிறது.  முழுமையான  கறுப்பு நிற ஆடையுடன், தலையில்  கேப்புடன், தொழிற்சாலை பின்னணியில், பிரபாஸ் அட்டகாசமாக அமர்ந்திருக்கும் தோற்றம், படத்தின் மீதான  ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.

Check it out here:
https://x.com/kalki2898ad/status/1766066282846400865?s=46

சமீபத்தில்தான் நடிகர் பிரபாஸ், நடிகை திஷா பதானி, இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் பிரியங்கா தத் ஆகியோர் இப்படத்தின் ஒரு பாடலைப் படமாக்க இத்தாலிக்குச் சென்றிருந்தனர்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம், ஒரு பன்மொழித் திரைப்படமாக இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது.  புராணக் கதைகளின் அடிப்படையில்  எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதையாகும். இப்படம் மே 9, 2024 அன்று பான்-இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Previous Post

பெண்களைப் பற்றிய சக்திவாய்ந்த மற்றும் ஆழமான பாடலை இந்த மகளிர் தினத்திற்காக 12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ளார்!

Next Post

மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து

Next Post

மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து

Popular News

  • அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிங்காரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.