• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவின் கதை ” 1982 அன்பரசின் காதல்” புதிய இயக்குனர் அறிமுகம் |

by Tamil2daynews
December 24, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவின் கதை ” 1982 அன்பரசின் காதல்” புதிய இயக்குனர் அறிமுகம் |
” 1982 அன்பரசின் காதல் ” என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்கும் புதுமுக இயக்குனரான உல்லாஷ் சங்கர் படத்தைப் பற்றி கூறியதாவது.
“கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான்.  அந்த பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயலுகிறான். அவனால் வெளிப்படுத்த இயலவில்லை. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்றனர்.  மனம் தளராத அன்பரசு காதலி இருக்கும்  கேரளாவிற்கு  சென்று அவளிடம் காதலை கூற   முற்படுதையில் அந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது. அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அன்பரசு  அவளிடம் தன் காதலை சொன்னானா ? என்பதை கதைக்களமாக்கி, “நறுக்”கான வசனம் எழுதி பரபரப்பான திரைக்கதை அமைத்து எனது முதல் படமாக இதை டைரக்ட் செய்துள்ளேன்” என்று மட மடவென கூறினார் இயக்குனர் உல்லாஷ் சங்கர். இவரும் இதில் பிரதான கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இவர் பல மொழி படங்களில் நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ்  சிவப்பிரகாசம், செல்வா ஆகியோருடன் உல்லாஷ் சங்கரும் நடித்துள்ளார்.
ஜிஸ்பின் செபாஸ்டியன் ஒளிப்பதிவையும், கிரேசன் படத்தொகுப்பையும், எஸ். சிந்தாமணி இசையையும், சிபு கிருஷ்ணா கலையையும், டின்ஸ் ஜேம்ஸ் சண்டைப் பயிற்சியையும், நிதின் கே. உதயன் புகைப்படங்களையும், ராயீஸ் சுல்தான் நடன பயிற்சியையும், விஜயமுரளி மக்கள் தொடர்பையும் அனுமோட் சிவராம், பென்னி இருவரும் பின்னணி இசையையும் கவனித்துள்ளனர்.
தேனி, கம்பம், போடிநாயக்கனூர், மூணார் மற்றும் கேரளாவில் உள்ள அழகிய இடங்களில் வளர்ந்துள்ள இதன் இணைத்தயாரிப்பை ஷைனி அலியாஸ் கவனிக்க,இப்படத்தை தேவகன்யா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பிஜு கரிம்பின் கலையில் தயாரித்துள்ளார்.
படத்தின் துவக்கம் முதல் உச்சகட்ட காட்சி வரை திரில், மர்மம், ஆக்சன், காமெடி, மற்றும் இசைக்கு முக்கியத்துவம் தரும்படமாக  அனைத்து தரப்பு மக்களையும் கவரும் , வண்ணம் உல்லாஷ் சங்கர் இயக்கி உள்ளார்.
விரைவில் திரைக்கு வர உள்ளது ” 1982 அன்பரசின் காதல்.”
Previous Post

என்ஜாய் ; விமர்சனம்

Next Post

‘பாசக்கார பய’ விமர்சனம்

Next Post

'பாசக்கார பய' விமர்சனம்

Popular News

  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.