• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

by Tamil2daynews
March 6, 2022
in சினிமா செய்திகள்
0
ஆக்க்ஷன் கிங் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்..!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Kadaikutty Singam | Tamil Movie News - Times of India
வணக்கம்.
​உழவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை  உருவாக்கவும், நடிகர் கார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே  உழவன் ஃபவுண்டேஷன்.​உழவுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி இயங்கிவரும் உழவன் ஃபவுண்டேஷன், முதன் முதலில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை கண்டறிந்து ஆதரவுக்கரம் நீட்டியது. ​பல நீர் ஆதாரங்களை சீரமைக்க துணை நின்றதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான செயல்திட்டங்களையும் தீட்டி   வருகிறது.​நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து பரவலாக்கும் விவசாயிகள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்கள் பணிகள் மேலும் தொய்வின்றி நடக்க ஊக்கத்தொகை அளித்து வருகிறது. மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்கும் போட்டியையும் மாநில அளவில் நடத்தி வருகிறது. அதோடு ஆண்டுதோறும் உழவர் பெருமக்களுக்கு விருதுகள்  வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது.
Watch Kadaikutty Singam Full Movie Online For Free In HD Quality
​நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த விற்பனை  உத்திகளைக் கையாளும் விவசாயிகள்,  வெற்றிகரமாக இயங்கும் பெண் விவசாயிகள்,  பார்வை சவால் உள்ள மாற்றுத் திறனாளி, விவசாயத்தை பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் மாற்றுப்பள்ளி, படித்துக்ககொண்டே விவசாயத்திலும் தீவிரம் காட்டும்  மாணவர் என வேளாண்மையை நேசிக்கும் மக்களை கண்டறிந்து  ஊக்கத்தொகை அளித்து வருகிறது உழவர் பவுண்டேசன்.​அந்த வகையில் விவசாயத்திற்காக பல்வேறு வகையில் மாபெரும் பங்களித்து வருபவர்களை கெளரவப்படுத்தி  அங்கிகரீக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் – 2022 விழா வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி நடக்கிறது. அன்று மதியம் 3.00 மணியளவில் தியாகராயர் நகரில் உள்ள சர். பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நிகழ்ச்சி துவங்குகிறது.
Kadaikutty Singam Photos: HD Images, Pictures, Stills, First Look Posters  of Kadaikutty Singam Movie - FilmiBeat
​தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உழவர் விருது மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படவிருக்கிறது.​இதில் சிறந்த பெண் விவசாயிக்கான விருதை  பள்ளபட்டி சரோஜா அவர்களுக்கும், சிறந்த பெண் விவசாயிகள் கூட்டமைப்புக்கான விருதை வாசுதேவநல்லூர் “சங்கனாப்பேரி களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்திற்கும்” மரபு விதைகள் சேகரிப்பு மற்றும் பரவலாக்கத்திற்காக ஒட்டன்சத்திரம் பரமேஸ்வரன் அவர்களுக்கும்,​நீர் நிலைகளை மீட்டெடுத்தலுக்கான விருதை திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சார்ந்த நம் அனுமன் நதி அமைப்பிற்கும், சிறந்த வேளாண் கூட்டுறவுக்கான விருதை கோத்தகிரி நம் சந்தை அமைப்பிற்கும், வேளாண் சிறப்பு விருது மயிலம் சிருஷ்டி பவுண்டேஷன் அமைப்பிற்கும் வழங்கப்படவிருக்கிறது.​இந்த விழாவில் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனர் கார்த்தி, ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மருத்துவர் கு. சிவராமன், சூழலியலாளர் பாமயன் மற்றும் சூழலியலாளர் அனந்து ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கவிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
நன்றி.
என்றென்றும் அன்புடன்
க. சத்தீஸ்வரன்,
ஒருங்கிணைப்பாளர்,
உழவன் ஃபவுண்டேஷன்,
சென்னை – 17.
Previous Post

சென்னைக்கு வந்த “பாகுபலி” ஹீரோவும்,”பீஸ்ட்”நாயகியும்..!

Next Post

சுந்தர் . சி யின் “வல்லான்” பட டீசரின் சாதனை..!

Next Post
சுந்தர் . சி யின் “வல்லான்”  பட டீசரின் சாதனை..!

சுந்தர் . சி யின் "வல்லான்" பட டீசரின் சாதனை..!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.