• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது !!

by Tamil2daynews
July 23, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது !!

 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல்  நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மத்தகம்’ சீரிஸின் டீசரை  வெளியிட்டுள்ளது.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.

டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும், குட் நைட் புகழ் மணிகண்டன் முதல் முறையாக ஒரு வில்லத்தனம் மிகுந்த கேங்ஸ்டராகவும் தோன்றுகிறார்கள்.

வெகு சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருக்கும் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டுவதுடன், இந்த சீரிஸ் ஒரு அற்புதமான த்ரில்லராக இருக்கும் என்பதை வலுவாக வெளிப்படுத்துகிறது.

ஒரு இரவில் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் குரலுடன் டீஸர் தொடங்குகிறது. அதன்பிறகு அது அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் வெகு பரபரப்பான காட்சிகளைக் காட்சிப்படுத்துகிறது, பரபரப்பான ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு ரசிகர்கள் தயாராகலாம்.
Mathagam official teaser disneyplus hotstar atharva manikandan web series videoScreen Scene Media Entertainment தயாரிப்பில்,  உருவாகியுள்ள இந்த சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும், இந்த சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும் யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.

இந்த சீரிஸுன் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளைப் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.
Tags: Atharva MuraliHOTSTARmanikandanMATHAGAM
Previous Post

மாரி செல்வராஜின் அடுத்த படம் எதிர்பார்ப்பில் உதயநிதி ஸ்டாலின்..!

Next Post

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' பத்திரிகையாளர் சந்திப்பு

Popular News

  • I”am Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏன் என்னை ஏதோ செய்தாய்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.