
கணேஷ் – ராஜலட்சுமி இருவருமே கிராமிய பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகியவர்கள்.சூப்பர் சிங்கரில் பங்கேற்று செந்தில் டைட்டில் வின்னர் ஆன பின்னர் இந்த ஜோடி அடுத்த கட்டத்திற்கு சென்றது.

வெள்ளிதிரையில் சில படங்களில் இருவரும் பாடி உள்ளார்கள். இந்த ஜோடியின் சொந்த பாடலான “சின்ன மச்சான்” பாடலை சார்லி சாப்ளின் 2-வில் இருவரும் பாடி அசத்த அதுவும் சூப்பர் ஹிட்டானது.சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “அய்யா சாமி” பாடலை ராஜலட்சுமி தான் பாடி இருக்கிறார்.இதனை தொடர்ந்து கணவன் – மனைவி இருவருமே ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில் மார்டன் ஆடையில் இவர்கள் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது..