• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Eid Movies: ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் படே மியான் சோட் மியான் திரைப்படம்!

by Tamil2daynews
April 10, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Eid Movies: ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் படே மியான் சோட் மியான் திரைப்படம்!

Bade Miyan Chote Miyan: அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படே மியான் சோட் மியான் படம்  ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.

அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்துள்ள படே மியான் சோட் மியான் இந்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஈத் வெளியீடாக இருந்து வருகிறது. இதுவரை படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், திரையரங்கில் இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்.  இந்தியாவில் ஈத் பண்டிகை வரும் ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், ரசிகர்களுக்கு ஸ்பெஷல் படமாக இருக்கும் வகையில் படத்தை பண்டிகை நாளில் மட்டும் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அக்ஷய் மற்றும் டைகர் இடையேயான நட்புறவு ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது, எனவே திரையரங்கில் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படங்களான பதான் மற்றும் ஜவான் ஆகியவற்றில் பரிபுரிந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனரான கிரேக் மேக்ரேயின் இப்படத்தின் ஆக்‌ஷன் இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கிரேக் மேக்ரே ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் ஆகியவற்றில் தனது அதிரடி காட்சிகளுக்காகவும் புகழ் பெற்றவர். ‘படே மியான் சோட்டே மியான்’ படம் குறித்து தயாரிப்பாளர் பேசுகையில், ” ரசிகர்ளுக்கு வாழ்நாளில் சிறப்பான சினிமா அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இயக்குனர் அலி அப்பாஸ் திரைக்கதை உங்களை நிச்சயம் கவரும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். ரசிகர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது என்பதற்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் இதுவரை பார்த்திராத ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாக வெளியாக உள்ளது.  வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை AAZ பிலிம்ஸ் உடன் இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாபர் எழுதி இயக்கியுள்ள இப்படம் வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. ஜீ மியூசிக் இப்படத்திற்கான இசை உரிமையை பெற்றுள்ளது.  இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 11, 2024 வியாழன் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்ஹா, அலையா எஃப், மனுஷி சில்லர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Previous Post

பரம் இயக்கத்தில் டாலி தனஞ்செய் நடிக்கும் ‘கோடீ’

Next Post

‘லவ் டுடே’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

Next Post

'லவ் டுடே' மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

Popular News

  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.