• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அசத்தலான காமெடிக் கொண்டாட்டம் , நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

by Tamil2daynews
February 20, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அசத்தலான காமெடிக் கொண்டாட்டம் , நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

 

மலையாளத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5 தளத்தில்  தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது

~இந்தத் திரைப்படத்தை M. பத்மகுமார் இயக்கியுள்ளார். பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.~

நரேன், ஸ்வேதா மேனன் மற்றும் V.K.பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும்  Zee5 தளம், அடுத்தடுத்து பல புதிய திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களை ரசிகர்களுக்காகத் தந்து வருகிறது. அந்த வகையில் இந்த காதலர் தினக் கொண்டாட்டமாகக் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற குயின் எலிசபெத் திரைப்படத்தை, ஸ்ட் ரீம் செய்து வருகிறது.

மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரு கலக்கலான பொழுதுபோக்கு காமெடிப் படமாக, இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இயக்குநர் M பத்மகுமார் இயக்கத்தில், நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் நடிகர் நரேன் கூட்டணி 15 வருட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்துள்ளது.

ப்ளூ மவுண்ட் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ரஞ்சித் மணம்பரக்கட், எம். பத்மகுமார் மற்றும் ஸ்ரீராம் மணம்பரக்கட் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

திருமணமாகாத மிடில் ஏஜ் யுவதியான மீரா ஜாஸ்மின், தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தன்னை வெறுக்கும்படியான மனிதராக, யாருடைய துணையும் தேவையில்லை என வாழ்கிறார். நரேன் அவரது அன்பைப் பெறப் பல முயற்சிகள் செய்கிறார். பிஸினஸ் விசயமாக கோயம்புத்தூர் செல்லும் மீரா ஜாஸ்மினை அந்தப்பயணம் முழுதாக மாற்றுகிறது.

திருமணமாகாத ஒரு நடுத்தர வயத்துப்பெண்ணின் வாழ்க்கையை,  காதலைக் கண்டடையும் அவளின் பயணத்தை இந்தப்படம் அருமையான காமெடி கலந்து சொல்கிறது.

Trailer Link: https://zee5.onelink.me/RlQq/elizabeth

இயக்குநரும் தயாரிப்பாளருமான M.பத்மகுமார் கூறியதாவது… 

குயின் எலிசபெத் படத்திற்குத்  திரையரங்குகளில் கிடைத்த  வரவேற்பு உண்மையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் தந்த அன்பு எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது.  இப்படைப்பு  தற்போது ZEE5  வழியே உலகளாவிய பார்வையாளர்களிடம் சேரவுள்ளது.  இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு காதலர் தினத்தை விடச் சிறந்த தருணம் கிடைக்காது.  உங்கள் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் இந்தப்படத்தினை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில்  மகிழ்ச்சியடைகிறோம். இப்படம் உங்கள் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென நம்புகிறேன்.

நடிகை மீரா ஜாஸ்மின்  கூறியதாவது…

குயின் எலிசபெத் கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எலிசபெத், கண்டிப்பான நடத்தை கொண்ட, வலுவான, சுதந்திரமான பெண். எலிசபெத் கதாபாத்திரம் என் மனதிற்கு மிக நெருக்கமான பாத்திரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரைக்கு வருகிறேன் எனவே பார்வையாளர்கள் இந்த கதாபாத்திரத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஆர்வம் இருந்தது,  திரையரங்கு வெளியீட்டின் போது ரசிகர்கள் தந்த அன்பும் ஆதரவும் மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.  ரசிகர்களின் அன்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இப்படம் ZEE5 இல் டிஜிட்டல் ப்ரீமியராக உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களுக்குச் சென்றடைவது மகிழ்ச்சி.  பார்வையாளர்களின் கருத்துக்களை அறிய மிக ஆவலாக உள்ளேன்.

நடிகர் நரேன் கூறியதாவது.., 

இது ஒரு நம்பமுடியாத பயணம். குயின் எலிசபெத் படத்தில் அலெக்ஸ் பாத்திரத்தில் நடித்தது அருமையான அனுபவம். தேசம் முழுக்க படத்தைக் கொண்டாடியதுடன் என் கதாபாத்திரத்தைத் தனித்து பாராட்டியது மிகப்பெரும் மகிழ்ச்சி.  நடிகை மீரா ஜாஸ்மினுடன் இணைந்து நடித்தது, மறக்க முடியாத அனுபவம். ஷீட்டிங்கில் நாங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டோம். இயக்குநர் M.பத்மகுமாரின் பார்வையும் வழிகாட்டுதலும் மிகவும் உதவிகரமாக இருந்தது. ZEE5 இன் இந்த டிஜிட்டல் வெளியீட்டில் உலகம் முழுக்கவுள்ள பார்வையாளர்கள் இப்படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

அசத்தலான ரோம் காம் திரைப்படமான “குயின் எலிசபெத்” படத்தினை ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.
Previous Post

ரியோட்டா மீடியா தயாரிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Next Post

திமுக அமைச்சர் வெளியிட்ட ஆன்மீக பாடல்..!

Next Post

திமுக அமைச்சர் வெளியிட்ட ஆன்மீக பாடல்..!

Popular News

  • திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !

    0 shares
    Share 0 Tweet 0
  • ’கஜானா’ படம் போல் தமிழ் சினிமாவில் அட்வெஞ்சர் படம் வந்ததில்லை – நடிகை வேதிகா உறுதி

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நடிகர் கார்த்தி !! ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

November 10, 2025

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

November 10, 2025

நிஜம் சினிமா தனது முதல் தயாரிப்பில் வெள்ளகுதிர

November 10, 2025
சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

November 8, 2025

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

November 8, 2025

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்

November 8, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.