• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’அஸ்வின்ஸ்’ அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது!

by Tamil2daynews
July 26, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’அஸ்வின்ஸ்’ அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது!

 

கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டம் ‘தியேட்டர்’ மற்றும் ‘ஓடிடி’ என படம் பார்க்கும் பார்வையாளர்களின் பொழுதுபோக்கை வகைப்படுத்தும் போக்கை முற்றிலும் மாற்றியுள்ளது. இந்த இரண்டு வகையிலும் பார்வையாளர்களின் ரசனையை திருப்திப்படுத்துவது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இன்று மிகப்பெரிய சவாலாகிவிட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரித்து, பாபிநீடு வழங்கிய திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்த இந்தப் படம் ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம். திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதேபோன்றதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை திரையரங்குகளில் நிறைவு செய்து  ரிலீஸைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அதன் ஓடிடி வெளியீட்டின் மூலம் எல்லைகளைத் தாண்டி அபரிமிதமான ஒரு வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் திரையிடப்பட்ட இந்த ஹாரர் திரில்லர் படம், பல நாடுகளில் முதல் 10 ரேங்கிங்கில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் மூன்று மற்றும் நான்காம் இடத்திலும், மலேசியாவில் 7, சிங்கப்பூரில் 10 மற்றும் இலங்கையில் 5 என பல நாடுகளில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா கூறும்போது,
“ஒட்டுமொத்த திரையுலகமும் ‘சரியான இடத்தில் சரியான நேரத்தில்’ என்ற விஷயத்தை நம்புகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவைச் சேர்ந்த நாங்கள், எங்களின் வெற்றிப் படமான ‘அஸ்வின்ஸ்’ மூலம் அது நடந்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறோம். நம் நாட்டிற்கு அப்பால், பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய படமாக உருவாக்கித் தந்த ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. இந்தப் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்குத் தூண்களாக இருந்த என் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் இதயங்களை வெல்வதில் தவறுவதில்லை. மேலும், ’அஸ்வின்ஸ்’ அனைத்து இடங்களிலும் உள்ள பார்வையாளர்களின் அன்பையும் ஆதரவையும் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற ஒரு அற்புதமான வெற்றி, எங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நல்ல மற்றும் தனித்துவமான உள்ளடக்கத்துடன் மேலும் பல படங்களைத் தயாரித்து வழங்க ஊக்குவிக்கிறது” என்றார்.
வசந்த் ரவி, விமல் ராமன், முரளி, சரஸ்வதி மேனன் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ள இந்த சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படமான ’அஸ்வின்ஸ்’ஸை தருண் தேஜா எழுதி இயக்கியுள்ளார்.
Previous Post

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்

Next Post

மிஸ்கின் போல திறமையானவர் ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு

Next Post

மிஸ்கின் போல திறமையானவர் ; 'வெப்' இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.