• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து வழங்கும் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் #VD12

by Tamil2daynews
January 16, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து வழங்கும் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் #VD12

 

முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸூடன் இணைந்து தெலுங்கின் சிறந்த கதைசொல்லிகளுள் ஒருவரான கெளதம் தின்னனுரி இயக்கத்தில்  ‘யங் சென்சேஷன்’ விஜய் தேவரகொண்டாவின் #VD12 படத்தைத் தயாரிக்கிறது. ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை நாக வம்சி எஸ் மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். கடைசியாக கெளதம், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் உடன் கைக்கோத்து தயாரித்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமான ‘ஜெர்ஸி’ தேசிய விருது வென்றது. இதில் நானி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வெற்றிப் பெற்றது.

‘நான் யாரைக் காட்டிக் கொடுத்தேன் என்று சொல்ல, நான் எங்கிருந்து வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை’ என்ற மேற்கோள் இடம்பெறும் போஸ்டருடன் தயாரிப்பாளர்கள் இந்தப் படம் குறித்தான  அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் உள்ள காவல்துறை அதிகாரியின் முகம் ஷில்லவுட்டில் துணி மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து #VD12 நிச்சயம் ஒரு பீரியாடிக் காப் ட்ராமாவாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. இதன் மூலம் விஜய் தேவரகொண்டா தனது நடிப்பு பயணத்தில் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். போஸ்டரில் நீருக்கு நடுவே பற்றி எரியக் கூடிய கப்பல் ஒன்று பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
Image
இந்தப் படம் குறித்தான அறிவிப்பு பற்றித் தயாரிப்பாளர் எஸ் நாக வம்சி பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் உண்டு பண்ணக்கூடிய அளவுக்கு பிரம்மாண்டமான படைப்பு என்று நாங்கள் சொல்லப் போவதில்லை. ஆனால், நிச்சயம் இது வித்தியாசமான படைப்பாக இருக்கும்” என்றார்.

கௌதம் தின்னனுரி, ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தனது தகுதியை நிரூபித்திருக்கிறார். 2019ல் வெளியான அவரது ‘ஜெர்ஸி’ தெலுங்கில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த எடிட்டிங் பிரிவுகளில் விருதுகள் வென்றது.

இந்த இணை தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்துள்ளது பார்வையாளர்களிடையேயும் சினிமா ஆர்வலர்களிடையேயும் தீவிரமான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ’அர்ஜூன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’, ‘பெல்லி சூப்லு’ ஆகிய படங்களில் கதாபாத்திரங்கள் மூலம்  வித்தியாசமான நடிப்பைக் கொடுத்த விஜய் தேவரகொண்டா இந்தப் படத்திலும் அப்படியான நடிப்பைக் கொடுப்பார் என இயக்குநரும் படக்குழுவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தரமான படங்களை திறமையான நடிகர்கள் மூலம் கொண்டு வந்துள்ளனர். அந்த வகையில், விஜய்யுடன் இவர்கள் முதன் முறையாக இணைந்துள்ள படம் எப்படி வர இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. விரைவில் தொடங்க உள்ள இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Previous Post

சங்கராந்தி பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் 16 புதிய தெலுங்கு படங்களின் லைன்- அப் குறித்து வெளியிட்டிருக்கிறார்கள்!

Next Post

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். டி. அருளானந்து வழங்கும், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஜோ’

Next Post

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். டி. அருளானந்து வழங்கும், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஜோ’

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.