• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். டி. அருளானந்து வழங்கும், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஜோ’

by Tamil2daynews
January 16, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். டி. அருளானந்து வழங்கும், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஜோ’

 


அரிதாக வெகு சில நடிகர்கள் மட்டுமே, ’நம் பக்கத்து வீட்டு பையன்’ என்ற உணர்வைக் கொடுத்து நம் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொள்வார்கள். அந்த வகையில், நிறைய நடிகர்கள் இந்த வகையில் உள்ளே நுழைந்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இதில் நடிகர் ரியோ ராஜூம் ஒருவர். காமெடி எண்டர்டெயினராக பார்வையாளர்களை மகிழ்வித்தவர் தற்போது அழகான ஃபீல் குட் ரொமாண்டிக் எண்டர்டெயினரான ‘ஜோ’ படத்துடன் வருகிறார். இதனை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்க, விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். டி. அருளானந்து தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் பான் இந்திய நடிகரான துல்கர் சல்மான் வெளியிட இதற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
நடிகர் ரியோ ராஜ் பேசும்போது, “’ஜோ’ திரைப்படம் எங்கள் நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட எங்கள் ஒட்டுமொத்த அணியின் அடையாளம் மற்றும் முகவரி. மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். கதாநாயகனான ‘ஜோ’வின் பள்ளிக் காலத்தில் இருந்து அவனது திருமணத்திற்குப் பிந்தைய நாட்கள் வரையிலான காதல் பயணத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகிறது. படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்காக நான் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பேன். இதன் காரணமாகவே, வேறு எந்த புராஜெக்ட்டிலும் கடந்த இரண்டு வருடங்களாக நான் ஈடுபட முடியாமல் இருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஹரிஹரன் ராமுடன் இருக்கும் நட்பு பற்றி பகிர்ந்த கொண்ட ரியோ ராஜ், “அவர் என்னுடைய முதல் படத்தின் இயக்குநர் மற்றும் எங்களுக்குள் நான்கு வருட நட்பு இருக்கிறது. ஒரு அணியாக எங்களுடைய சிறந்ததைக் கொடுத்திருக்கிறோம். படப்பிடிப்பு நிறைவடைந்த நாளில் தயாரிப்பாளர் எங்கள் படக்குழுவை பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும்,  அணியில் உள்ள 200 பேருக்கும் படப்பிடிப்பின் கடைசி நாளில் சிறப்பான மதிய உணவு கொடுத்தார். இது எங்களை உற்சாகமடையச் செய்த தருணங்களில் ஒன்று”.

மொத்த படப்பிடிப்பும் வெறும் 37 நாட்களில் முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகர் ரியோ ராஜ் பகிர்ந்துகொண்டதாவது, “இதற்கு தயாரிப்பாளரின் ஒத்துழைப்புதான் முழுமுதற் காரணம். எங்களுடைய தயாரிப்பு நிர்வாகி வீர சங்கர் சார் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தினமும் சரியாக பேமெண்ட் கொடுத்து மொத்த படப்பிடிப்பு குழுவையும் உற்சாகப்படுத்தினார். இது சிறந்த அவுட்புட் வர ஒரு காரணமானது”.

சென்னை, ராமேஸ்வரம், ராம்நாடு, பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. முதலாமடை ரயில் நிலையத்திலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது இதில் உள்ள சுவாரஸ்யமான உண்மை. நடிகர் கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்திற்கு அடுத்து பல வருடங்கள் கழித்து ‘ஜோ’ திரைப்படம் மட்டும் தான் இந்த லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஜானர் குறித்து கேட்டபோது ரியோ ராஜ் தெரிவித்ததாவது, “’ஜோ’ 100% பார்வையாளகளுக்கு ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியாக இருக்கும். படத்தின் டீசர் அந்த உணர்வை நிச்சயம் கடத்தும்”.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

இசை: ‘பேச்சுலர்’ படப்புகழ் சித்துகுமார்,
ஒளிப்பதிவு: ராகுல் கே.ஜி. விக்னேஷ்,
படத்தொகுப்பு: வருண் கே.ஜி.,
கலை இயக்குநர்:  ABR,
சண்டைப் பயிற்சி: பவர் பாண்டியன்,
தயாரிப்பு கட்டுப்பாடு: எல்.எம். தனசேகர்,
ஒளிப்பதிவு: அபு & சால்ஸ்,
பாடல் வரிகள்: வைசாக் விக்னேஷ் ராமகிருஷ்ணா,
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா D’One

Previous Post

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து வழங்கும் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் #VD12

Next Post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனு ஆனந்த் …

Next Post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனு ஆனந்த் ...

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.