ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜீ5 ன் ஓடிடி தளத்தில் சாதனை படைத்த அருண் விஜய்..!

by Tamil2daynews
August 28, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜீ5 ன் ஓடிடி தளத்தில் சாதனை படைத்த அருண் விஜய்..!

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.

ஜீ5 தளத்தின் லேட்டஸ்ட் வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில்  திரையிடப்பட்ட, நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” திரைப்படம், குறுகிய காலத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து ஒரு அற்புதமான சாதனையைப் படைத்துள்ளது. இத்திரைப்படம், திரையரங்கில் வெளியான போதே  விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பலத்த பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடதக்கது.  இப்போது ஓடிடி பிரீமியரில் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  பாசம், ஆக்சன், சென்டிமென்ட், காதல் மற்றும் குடும்பப் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இது தவிர, அருண் விஜய் மற்றும் நட்சத்திர நடிகர்களின் அசத்தலான நடிப்பு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனம் மயக்கும் இசையமைப்பு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு இந்த படத்தினை வெகுவாக அழகுபடுத்தியுள்ளது.

படத்தின் வெற்றி குறித்து ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறியதாவது.., “ஜீ5 இல், எங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படி அவர்களுக்கு விருப்பமான மொழியில் பிரபலமான படைப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம். சிறந்த படைப்புகளை வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் முழுக்கவனத்தை செலுத்துகிறோம் என்று பெருமிதம் கொள்கிறோம்.  யானை ஒரு தனித்துவமான கமர்ஷியல் படம். குறுகிய காலத்திற்குள் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு எங்களுக்கு மிகுந்த  மகிழ்ச்சி தந்துள்ளது, மேலும் இந்த வெற்றி எங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கை தொடர்ந்து வழங்க எங்களை  ஊக்குவித்துள்ளது.

ஜீ5 தளம் ஏற்கனவே  சிறந்த உள்ளடக்கம் கொண்ட ஒரிஜினல் தொடர்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களின் பரவலான வரிசைகளை கொண்டுள்ளது.  தற்போது ‘யானை’ படத்தின் மாபெரும் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. ஜீ5 மலிவு விலையில் சிறந்த உள்ளடக்கத்தை வழங்குவதில் அதன் நிபுணத்துவத்திற்காக குடும்ப பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விலங்கு, ஆனந்தம், ஃபிங்கர்டிப் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என  பல்வேறு ஜானர்களில் அசல் தொடர்களை உருவாக்கி வழங்குவதில் தனது சிறந்த திறனை நிரூபித்துள்ளது.

‘யானை’யின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜீ5 அதன் ஒரிஜினல் மற்றும் புதிய திரைப்படங்களின் அடுத்த வரிசைகளை விரைவில் வெளியிடவுள்ளது.
Previous Post

என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

Next Post

‘என் சென்னை யங் சென்னை’ விருதுகள்!

Next Post

‘என் சென்னை யங் சென்னை’ விருதுகள்!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறந்த ஸ்டூடியோஸ் விருதை தட்டிச் சென்ற ‘KNACK’ Studios!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்

June 1, 2023

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளில் இயக்குனர் பாரதி கணேஷ்-ன் புதிய படம் ஆரம்பமாகிறது

June 1, 2023

‘போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 1, 2023

கோவையில் நடைபெற்ற ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழாவில் கதை பற்றி வெளிப்படையாக பேசிய சுனைனா

June 1, 2023

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’

June 1, 2023

‘துரிதம்’ – விமர்சனம்

June 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!