• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரௌடி பிக்ச்சர்ஸின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

விக்னேஷ் சிவன் நயன்தாரா புத்தாண்டு வாழ்த்து

by Tamil2daynews
January 2, 2022
in சினிமா செய்திகள்
0
ரௌடி பிக்ச்சர்ஸின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கடந்த 2021-ஆம் ஆண்டு எங்கள் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களுக்கு பெருமை தேடித் தரக் கூடிய தனித்துவமான படைப்புகளையும், அதே சமயம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஜனரஞ்சகமான படைப்புகளையும் ஒருசேர அளித்திட வேண்டும் என்ற பெருங்கனவோடும் மிகுந்த ஆவலோடும் துவங்கப்பட்ட எங்கள் நிறுவனத்திற்கு முதல் ஆண்டே வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருப்பதை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் முதல் பெருமைமிகு தயாரிப்பாக அமைந்த ‘கூழாங்கல்’ திரைப்படம்  பல உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி,  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் டைகர் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் வென்று, பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுக்களையும்  குவித்தது. ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான போட்டிப் பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக தேர்வானதும், தற்போது ஃபிலிம் இண்டிபெண்டென்ட் ஸ்பிரிட் விருதுக்கு இறுதிச் சுற்றில் தேர்வாகி இருப்பதும் எங்கள் நிறுவனத்தை மேலும் பெருமை அடையச் செய்துள்ளது.
எங்கள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பும், முதல் வெளியீடுமான ‘நெற்றிக்கண்’ திரைப்படமானது, நயன்தாரா நடிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றதோடு ரசிகர்களின் பேராதரவையும் பெற்றது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ‘ராக்கி’ திரைப்படமும் வித்தியாசமான ஒரு படைப்பாக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று எங்கள் நிறுவனத்திற்கு மற்றுமொரு பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது.
இந்த வெற்றிகள் தந்த உற்சாகத்தோடு வரும் புத்தாண்டில் 4 புதிய படங்களுடன் களமிறங்குவதில் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் மென்மேலும் மகிழ்ச்சி கொள்கிறது.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் எஸ். எஸ். லலித்குமாருடன் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’; அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் நடிக்கும் திகில் படமான ‘கனெக்ட்’ ; மற்றும் அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ புகழ் கிருஷ்ண குமார், பாடகி ஜொனிதா காந்தி, மால்தி சாஹர், வைஷ்ணவி அந்தேல், ரச்சேல் டேவிட் போன்ற இளம் நட்சத்திரங்கள் நடிக்கும் ரொமாண்டிக் படமான ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ ஆகிய படங்கள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அறிமுக இயக்குனர் அருண் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும் ‘ஊர் குருவி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
எங்களின் இந்த வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடகத் துறையை சேர்ந்த நண்பர்கள் ஆகிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு எதிர்வரும் இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் வளமான ஒரு ஆண்டாக அமையவும் மனதார வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு,
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
Previous Post

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும்.-விசிக தலைவர் . தொல் திருமாவளவன் MP.

Next Post

அடுத்த படத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன் – SK 20…

Next Post
அடுத்த படத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன் – SK 20…

அடுத்த படத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன் - SK 20...

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.