• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புதிய தொழில் தொடங்கிய நயன்தாரா..!

by Tamil2daynews
October 26, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புதிய தொழில் தொடங்கிய நயன்தாரா..!

 

விஜயதசமியின் இந்த மங்களகரமான நாளில், நான் இன்று ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளேன். சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருக்கிறேன். இத்தனை வருடங்களில் இன்று மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாகவும் இருக்கிறேன். பல ஆண்டுகளாக நான் திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருந்தேன், பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்திருக்கிறேன். சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதையும் கவனிக்கிறேன். இந்த மகிழ்ச்சி அனைத்தும் இன்று ஒருங்கிணைந்துள்ளது.

பெண்களின் நல்வாழ்வுக்காக பலகட்ட யோசனையில் இருந்து உருவான திட்டமான ‘Femi9’ஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல. இது நான் நேசித்த ஒரு கனவு! அது திரைகளுக்கு அப்பால் சென்று பெண்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட முறையில் கனெக்ட் ஆகும்.

‘Femi9’ ஒரு பிராண்ட் மட்டுமல்ல. இது பெண்களின் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் பிரதிநிதித்துவம். தனிப்பட்ட சுகாதார உலகில், இது பெண்களால், பெண்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பயணத்தின் ஒவ்வொரு பகுதியும் அதாவது ஆரம்பம் முதல் இப்போது வரை அதில் ஒரு பகுதியாக இருக்கும் பெண்களால் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் உருவாக்கப்பட்டது.

தனிப்பட்ட வெற்றியை அடிக்கடி முன்னிலைப்படுத்தும் ஒரு துறையில், ‘Femi9’ என்பது ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, நம்பிக்கையின் கொண்டாட்டமாகும். தனிப்பட்ட சுகாதாரத்தில் இந்த முயற்சியை எடுக்க என்னைத் தூண்டியவர்களுக்கும் கொடுத்த ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன்.

என் வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் நன்றி. ‘Femi9’ என்பது நமது கூட்டு சாதனையாகும். நாம் ஒற்றுமையுடன் இருந்து ஒருவரையொருவர் உயர்த்தும்போது அனைவருக்கும் அது நன்மை கொடுக்கிறது.

‘Femi9’ ஒரு புராடக்ட், அது வாங்குபவர்களின் வீடுகளுக்குச் செல்கிறது என்பதையும் தாண்டி உலகெங்கிலும் உள்ள பெண்களின் இதயங்களைச் சென்றடையும் ஒரு பிராண்ட்.  இது அதிகாரமளிக்கும் ஆதாரமாகவும், ஆறுதலாகவும், ஒன்றாக இணைந்து, நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாகவும் இருக்கட்டும்.
அன்புடனும் நன்றியுடனும்,
நயன்தாரா
Previous Post

சல்மான் கான்-கத்ரீனா கெமிஸ்ட்ரியையும் தோழமையையும் ரசிகர்கள் விரும்புகிறார்கள் ; ‘டைகர் 3’யின் “லேகே பிரபு கா நாம்” பாடல் உடனே ஹிட்டானது ஏன் என்பது குறித்து நடன இயக்குனர் வைபவி மெர்ச்சன்ட்

Next Post

பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் ரா ஏஜென்ட் ஆக நடிக்கும் ஷாம்

Next Post

பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் ரா ஏஜென்ட் ஆக நடிக்கும் ஷாம்

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.