• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

by Tamil2daynews
October 19, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

 

பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22, 2024 அன்று வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது.இயக்குநர் பாயல் கபாடியா மற்றும் நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் இந்தப் படத்தின் உலகளாவிய பயணம் மற்றும் இந்தியாவில் அதன் வெளியீடு குறித்தான தங்கள் எண்ணங்களை மும்பையில் இன்று (17.10.2024) நடந்த   பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர்.
ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!படவெளியீடு பற்றி இயக்குநர் பாயல் கபாடியா பேசியதாவது, “இந்த படத்தை செதுக்க பல வருடங்கள் எடுத்துக் கொண்டோம். மேலும் ஸ்பிரிட் மீடியாவுடனான இணைந்திருப்பது படத்தை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் எடுத்து செல்லும் என்பதில் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய படம் இந்தியத் திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. இந்திய பார்வையாளர்கள் திரையரங்குகளில் டிக்கெட் வாங்கி பெரிய திரையில் படத்தைக் கொண்டாடுவதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்றார்.
நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி பேசியதாவது, “இந்தியத் திரையரங்குகளில் இந்த சிறந்த படம் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள கதைகளைக் கொண்டு வருவதை ஸ்பிரிட் மீடியா நோக்கமாகக் கொண்டுள்ளது. பாயலின் அழகான இந்தத் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்றார்.நவம்பர் 22, 2024 அன்று மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தா உட்பட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படம், பிரான்சின் பெட்டிட் சாகோஸ் மற்றும் இந்தியாவின் சாக் & சீஸ் ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ இண்டோ-பிரெஞ்ச் கூட்டுத் தயாரிப்பாகும்.  இத்திரைப்படத்தை இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் ஸ்பிரிட் மீடியா விநியோகிக்கிறது.

சாக் & சீஸ் படங்கள் பற்றி:

சாக் அண்ட் சீஸ் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியாவிற்கான கமர்ஷியல் தயாரிப்பதில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் அதன் முதல் முயற்சியாகும்.

ஸ்பிரிட் மீடியா பற்றி:
இந்த நிறுவனம் கடந்த2005 ஆம் ஆண்டு ராணா டகுபதி நிறுவினார். கதைகள், விநியோகம், திறமை மேலாண்மை, ஆக்கப்பூர்வமான பிராண்ட் மார்க்கெட்டிங் சேவைகள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க சந்தை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக ஸ்பிரிட் மீடியா விளங்குகிறது.

Previous Post

‘சார்’ – விமர்சனம்

Next Post

“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்கள், கதைக்கு நம்பகத்தன்மையையும், ஒரு புதிய ஆற்றலையும் கொண்டு வந்திருப்பதாக, முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்

Next Post

“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்கள், கதைக்கு நம்பகத்தன்மையையும், ஒரு புதிய ஆற்றலையும் கொண்டு வந்திருப்பதாக, முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்

Popular News

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.