• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

by Tamil2daynews
August 23, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

 

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – வசிஷ்டா (Vassishta) – எம். எம். கீரவாணி (MM Keeravani)- யுவி கிரியேசன்ஸ் (UV Creations) – கூட்டணியில் உருவாகும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு புதிய  சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்-  ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆச்சரியத்தை அளித்துள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கற்பனை கலந்த சமூக காட்சியின் ஒரு அற்புதமான விஷுவலாகும். இயக்குநர் வசிஷ்டா (Vassishta) இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி – பிரமோத் ( Pramod ) ஆகியோர் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார்கள். இந்த கிளிம்ப்ஸ் குறிப்பிடத்தக்க மற்றும் புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.

விஸ்வம்பராவின் உலகில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குழந்தைக்கும்,  ஒரு முதியவருக்கும் இடையேயான வசீகரிக்கும் உரையாடலுடன் இந்த காணொளி தொடங்குகிறது. ஒரு மனிதனின் சுயநலத்தால் தூண்டப்பட்ட மிகப்பெரிய அழிவை முதியவர் விவரிக்கிறார். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த மீட்பர் இறுதியாக வெளிப்படுகிறார். அவர் இந்த சாம்ராஜ்யத்தின் பாதுகாவலராக-  மிக சக்தி வாய்ந்த – வியப்பில் ஆழ்த்தக்கூடிய பிரவேசத்தை உருவாக்குகிறார்.

இந்த காட்சி தொகுப்பு நன்கு வடிவமைக்கப்பட்ட டீசராகும். இது சிரஞ்சீவியை ஒரு முக்கியமான வேடத்தில் பார்க்க ஆர்வமுள்ள திரைப்பட ஆர்வலர்களை சிலிர்க்க வைக்கும் என்று உறுதியளிக்கிறது. ஆரம்பக் கட்ட பரபரப்பு இப்போது அதிகரித்து வரும் நிலையில்.. கதை ஒரு புராணக் கதையை பற்றியதாக இருக்கிறது. அதில் சிரஞ்சீவி விஸ்வம்பராவின் பாதுகாவலராக தோன்றுகிறார்.

இயக்குநர் வசிஷ்டா பிரம்மாண்டமும், வெகுஜன ஈர்ப்பும் நிறைந்த ஒரு விகிதாச்சார காவியத்தை… பிரபஞ்சத்தை … கற்பனை செய்து படைத்திருப்பதாக தெரிகிறது. சிரஞ்சீவியின் காந்தம் போன்ற திரை ஆளுமை ஒவ்வொரு காட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் அவரது தீவிர நடிப்பு உண்மையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஸ்வம்பராவின் பிரபஞ்சத்தை கனவு போன்ற தொடுதலுடன் வடிவமைத்ததற்காக தயாரிப்பு வடிவமைப்பாளர் ஏ. எஸ். பிரகாசின் கடும் உழைப்பு பாராட்டக்கூடியதாக இருக்கிறது.
Imageஒளிப்பதிவாளர் சோட்டா கே. நாயுடு (Chota K Naidu)-  விஸ்வம்பராவின் மாய உலகத்தை வளமான …கம்பீரமான… காட்சி அமைப்புகளுடன் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் எம். எம். கீரவாணி ( MM Keeravani’s) கிளர்ச்சியூட்டும் வகையில் பின்னணி இசையை அமைத்து காணொளியை சக்தி வாய்ந்த உணர்ச்சி எழுச்சியை சேர்க்கிறது.  VFX – ஹாலிவுட் தரத்திற்கு நிகராக அமைந்திருக்கிறது. மேலும் யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு  மதிப்பீடுகள் கிளிம்ப்ஸ் முழுவதும் தெளிவாகத் தெரிகின்றன.

சிரஞ்சீவியின் புகழ்பெற்ற வாழ்க்கையில் விஸ்வம்பரா திரைப்படம்- ஒரு மைல்கல் படமாக இருப்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் சுட்டிக்காட்டுகிறது. இதனை திரை ரசிகர்கள் தவற விட விரும்பமாட்டார்கள். இந்தக் காட்சி உண்மையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும், அவரை போற்றும் ரசிகர்களுக்கும் மிகச் சரியான பிறந்தநாள் பரிசாகும்.

இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் ஆஷிகா ரங்கநாத் (Ashika Ranganath) மற்றும் குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே அறிவித்தபடி விஸ்வம்பரா 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும்.‌ இது இந்த சீசனின் மிகப்பெரிய ஈர்ப்பாகவும் இருக்கும்.

நடிகர்கள் :
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி , திரிஷா கிருஷ்ணன்,  ஆஷிகா ரங்கநாத் , குணால் கபூர் மற்றும் மௌனி ராய் ( ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றம் )

தொழில்நுட்ப குழு :

எழுத்து & இயக்கம் : வசிஷ்டா
தயாரிப்பாளர்கள் : விக்ரம், வம்சி – பிரமோத்
தயாரிப்பு நிறுவனம்:  யு வி கிரியேசன்ஸ்
இசை : எம். எம். கீரவாணி , பீம்ஸ் சிசிரோலியோ
ஒளிப்பதிவு : சோட்டா கே. நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஏ. எஸ். பிரகாஷ்

Previous Post

என் படத்தில் ரஜினி நடிக்காதது ஏன்.

Next Post

இந்திரா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

இந்திரா - விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹைக்கூ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

    0 shares
    Share 0 Tweet 0
  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.