• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 ஏன் உடனே பார்க்கப்பட வேண்டும்: இதோ 5 காரணங்கள்

by Tamil2daynews
January 12, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Imageபுஷ்பா: தி ரைஸ் பாகம் 1 , ப்ளாக்பஸ்டர் திரைப்படம் ப்ரைம் வீடியோவில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. ஜனவரி 14 ஆம் தேதி முதல் இது இந்தியில் ஸ்ட்ரீம் ஆகிறது.ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர்களுக்கு எப்போதுமே திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும். காரணம் கதையும், கலைஞர்களின் நடிப்பும், அப்புறம் வெகு நிச்சயமாக சண்டைக் காட்சிகளுக்காகவும் வரவேற்பு இருக்கும்.ஆனாலும் எப்போதாவது ஒருமுறை தான் புஷ்பா போன்ற படங்கள் திரைக்கு வருகின்றன. புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 திரை ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என அனைத்துமே தூள் ரகம். அதனாலேயே புஷ்பா ரசிகர்கள் பாடல்கள், வசனங்களை பேசி நடித்து ஆயிரக்கணக்கில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இத்தனைக்கும் பிறகும் புஷ்பா படம் பற்றி அறிந்ததில்லை எனக் கூறுவோர் பாறைக்கடியில் தான் வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கி தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் மொழிகளில் புஷ்பாவை ப்ரைம் வீடியோவில் பாருங்கள்.

5 காரணங்கள்:

புஷ்பா.. புஷ்ப ராஜ்: இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய மிக முக்கியக் காரணம் புஷ்பா பாத்திரத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜூன். ஏற்கெனவே அவர் திறன்மிகு நடிகர் என்பது திரையுலகம் அறிந்தது தான். ஆனால், புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 ல் அல்லு அர்ஜூனின் நடிப்பு அடுத்தக்கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. அவரது நடன அசைவுகளும், சண்டைக் காட்சிகளும், சின்ன சின்ன மேனரிஸம்களும், தாடியைத் தடவிக் கொடுக்கும் ஸ்டைலும் க்ளாஸ் ரகம். இந்தப் படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் இந்தியிலும் ஸ்ட்ரீம் ஆகிறது.

எல்லை கடந்த பேச்சு: புஷ்பா: தி ரைஸ் தேசிய எல்லை மட்டுமல்ல சர்வதேச எல்லையும் கடந்து புகழ் பெற்றுள்ளது. பல்வேறு செலிபிரிட்டிகளும் புஷ்பாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதே இதற்கு சாட்சி. புஷ்பா: தி ரைஸ் படத்தை இந்த ஆண்டின் சிறந்த என்டெர்டெய்னர் என்று கூறினால் அது மிகையாகாது.

இரண்டு நடிகர்கள்:  அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் என இரண்டு சிறந்த நடிகர்கள் திரையில் என்னவாகும் என்ற கேள்விக்கு.. மாயாஜாலம் நிகழும் என்பதுதான் பதில். அதுதான் நடந்துள்ளது. அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் என இரண்டு நடிகர்களும் திரையில் தோன்றும்போதெல்லாம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றனர். ஐயோ ஃபஹத்துக்கு இந்தப் படத்தில் நிறைய காட்சிகள் இல்லையே என வருந்தும் அவரது ரசிகர்கள் புஷ்பா: தி ரைஸ் : பாகம் 2க்கு காத்திருக்கலாம். இந்தப் படம் ஃபஹத்துக்கு தெலுங்கில் கன்னித் திரைப்படம் என்பது முக்கியமானது.

Allu Arjun's performance in Pushpa The Rise impresses Karan Johar, Arjun Kapoor, Selvaraghavan and others | Entertainment News,The Indian Express

இயக்குநர்: இந்தப் படத்தைக் காண நீங்கள் ரிமோட்டை ஆன் செய்தால் என்ட் கிரெடிட் முடியும் வரை நிறுத்தாமல் பார்ப்பீர்கள். அதற்குக் காரணம் இயக்குநர் சுகுமார். புஷ்பா: தி ரைஸ் படம் மூலம் ஆக்‌ஷன் படங்களுக்கு அவர் ஒர் அளவுகோலை நிர்ணயித்துள்ளார்.

ஆடியோ விஷுவல் விருந்து: இந்தப் படத்தில் பட்டாசு போல் வெடிக்கும், 10,000 வாட் மின்சாரம் போல் ஷாக்கடிக்கும் வசனங்களும், அழகிய லொக்கேஷன்களும், நடிகர்கள் ஒவ்வொருவரின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. படத்தைப் பார்த்து முடித்தவுடன் இரண்டாம் பாகம் எப்போது என்ற எண்ணம் உருவாகும்.

இதுவரை புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 ஐ பார்க்காவிட்டால் அவர்கள் பெரிதாக இழந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உங்களுக்காகவே ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் புஷ்பா ஸ்ட்ரீம் ஆகிறது. இப்போது வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் இந்தியிலும் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. வீக் எண்டுக்குத் தயாராகுங்கள், புஷ்பாவுடன்.

Previous Post

சினம் கொள் திரைவிமர்சனம்.

Next Post

‘வைகைப்புயல்’ வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

Next Post

'வைகைப்புயல்' வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.